சுஜாதாவின் “ பேப்பரில் பேர்”
எல்லாருக்கும் சிறு வயதில் கிராமத்தில் கிரிக் கெட் , கபடி, கில்லி தண்டா என்று ஆடிய சுவாரசியமான அனுபவம் இருக்கும். சுஜாதா தன் பாணியில் ஸ்ரீரங்கம் கிரிக்கெட் கிளப்பில் பொடியன்கள் கூட ஆடிய அனுபவத்தைக் கதையாகச் சொல்லுகிறார்.
கே வி தான் ஹீரோ – கேப்டன்
தஞ்சாவூர் டீம் – பெரிய டீம்
நீ நல்லா ஆடுவியோல்லியோ?
சுமாரா ஆடுவேன் – ரங்கராஜன் (சுஜாதா)
மாட்ச் நிஜ மாட்ச்சா ?
உனக்கு ஏண்டா இந்த வம்பெல்லாம்? பெரிய டீம்னா எங்கேயாவது எக்கச்சக்கமா பந்து போட்டு மர்ம ஸ்தா னத்துல பட்டுரப் போறது.
தஞ்சாவூர் டீம் வந்தபோது வயத்தில் புளியைக் கரைத்தது. ஒவ்வொருத்தரும் மாமா மாமாவாக தடித்தடியாக இருந்தார்கள். ( ஸ்ரீரங்கம் டீமில் பொடியன்கள் தான் ஜாஸ்தி)
முதலில் இவர்கள் கூட ஆட மறுத்தார்கள். கடைசியில் விளையாடி கே வியும் சுஜாதாவும் ஓபனிங் பேட்ஸ்மேனாக ஆடி 52 ரன் எடுத்தார்கள் ( அதில் சுஜாதா 4 ரன் தான்.) கே வியின் புண்ணியத்தில் அவர்கள் 152 ரன் எடுத்தார்கள். தஞ்சாவூர் டீமை 132ல் சுருட்டினார்கள். ( அம்பயரை வேறு கையில் போட்டுக்கொண்டு எல் பி டபுள்யூ கொடுக்காமல் செய்து விட்டான் கே வி.)
அடுத்த நாள் இந்த வெற்றிச் செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரில் மகா ஓரத்தில் “ K V Srinivasan was ably supported by Rengarajan என்ற நியூசும் வந்ததாம்.
சுஜாதா சொல்கிறார்:
“இப்போது எல்லா பேப்பரிலும் எத்தனையோ முறை என் பேர் வருகிறது. ஆனால் அந்த தினம் ஒரு மூலையில் ஒரு வரியில் கிடைத்த துல்லியமான சந்தோஷம் எனக்குத்திரும்பக் கிடைக்கவில்லை”
“பேப்பரில் பேர்” எவ்வளவு நிதர்சனம்!!