குவிகத்தைப் பற்றி …

குவிகத்தைப் பற்றி …

குமுதம்- விகடன்- கல்கி- குங்குமம் இவை நான்கும் தமிழ் நாட்டின் தலை சிறந்த இதழ்கள் !

   இவை தவிர மற்ற பத்திரிகைகள் தமிழில் ஏராளமாக உண்டு.

image

  இலக்கிய பத்திரிகைகள்  கலைமகள்,கணையாழி,தீபம்,அமுதசுரபி, காலச்சுவடு,மஞ்சரி.

பெண்களுக்கான பத்திரிகைகள்  –  சினேகிதி,மங்கை,மங்கையர்மலர்,அவள்,தோழி,தேவி

 குழந்தைகளுக்கான  பத்திரிகைகள் – சுட்டி,கோகுலம்,அம்புலிமாமா

ஜோசிய இதழ்கள் –சுபயோகம்,குமுதம்ஜோதிடம்,பாலஜோதிடம்

அரசியல் இதழ்கள் – துக்ளக்,நக்கீரன்,ஜூனியர்விகடன்,ரிப்போர்ட்டர்

சினிமா இதழ்கள் – சினிமாஎக்ஸ்பிரஸ்,வண்ணத்திரை,சினிக்கூத்து

பக்தி இதழ்கள் – குமுதம்பக்தி,சக்திவிகடன்,ஆலயம்

பாக்கெட் நாவல்கள் – ராணிமுத்து,மாலைமதி,

மற்றபத்திரிகைகள் – பாக்யாஇந்தியாடுடேகல்கண்டுகண்மணி, கல்யாணமாலை, முத்தாரம்,டைம்பாஸ்,கலைக்கதிர்,  தமிழ்கம்ப்யூட்டர் ,மோட்டார்விகடன்,நாணயம்,பசுமை  விகடன்

 மற்றும் விட்டுப்போன எண்ணற்ற பத்திரிகைகள் -வலைப் புத்தகங்கள் !

இவ்வளவு இருக்கும் போது குவிகம்  ஏன் என்று கேட்கிறீர்களா?

எவ்வளவு புடவை இருந்தாலும் பெண்டாட்டிக்கு ஏன்  அடிக்கடி புதுப் புடவை எடுக்கிறீர்கள்? அது மாதிரி தான்! 

பறவைகள் பலவிதம். ஒவ்வொன்றும் தனி விதம்!

 அப்புறம், கு-வி-க-ம் தலைப்பின் ஒவ்வொரு எழுத்தும் குமுதம், விகடன், கல்கி, குங்குமம் போன்ற பத்திரிகை பெயரிலிருந்து திருடியதா என்று கேட்கலாம் .

நிச்சயமாக இல்லை.

குவிகம் என்பது புதியதாக தமிழில்  செதுக்கப்பட்ட தலைப்பு.

எண்ணங்கள்  குவியும்  தளம்  குவிகம் !

கருத்துக்கள்  குவியும் களம்  குவிகம்!

குதூகலம் குவியும்  இடம் குவிகம் !

மொத்தத்தில் – நாம் குவியும் இடம் குவிகம் !!