தமிழின் அழகே எழில் ழகரம்

தமிழின்அழகேஎழில் ழகரம்

                    image

 ழகரம் ழகரம் தமிழகரம்

தமிழின் அழகே எழில் ழகரம்

 

 • விழியில் வழியும் அமிழ்தே ழகரம்
 • ஆழியில்பொழியும் மழையே ழகரம்
 • மகிழ்ச்சியில் பழுக்கும் பழமே ழகரம்
 • நெகிழ்ச்சியில் தழைக்கும் நிழலே ழகரம்
 • உழவும் தொழிலும் கமழ்ந்திடும் ழகரம்
 • மழுவும் கழிவும் கழிந்திடும் ழகரம்
 • வாழ்வும் தாழ்வும் பிறழும் ழகரம்
 • பழுதும் விழுதும் ஒழியும் ழகரம்
 • தொழுகையும் அழுகையும்  வாழ்வின் வழக்கம்
 • எழுகையும் முழுகையும்  முழவின் முழக்கம்
 • வாழையும் தாழையும் செழிப்பின் பழக்கம்
 • கோழையும்  மோழையும் அழிவின் புழுக்கம்
 • வாழ்வென்னும் வழியில்  குழிகள் பழிகள்
 • காழ்ப்பென்னும்   சுழியில் பழுதுகள் விழுதுகள்
 • தாழ்வென்னும் தகழியில் தழைகள் பிழைகள்
 • வீழ்கென  எழும்பும்  வேழமும் சூழுமும்
 • தாழ்ப்பாழ் அழுந்திட நழுவிடும் பொழுதினில் 
 • கொழுந்தென எழுந்திடும் விழியின்பொழில்கள்
 • தழுவிடத் தழுவிட அவிழ்ந்திடும் எழில்கள்
 • வழிந்திடும் விழியில் அமிழ்ந்திடும் அமிழ்து
 • வாழைப்  பழச்சாறோ  இதழின் உமிழ்ச்சாறோ
 • தாழைப் புழையூரில் பொழியும் கூழாறோ
 • தாழப் பழுவூரில்  இழையும் குழலேறோ
 • ஆழப் புகழூரில் தழையும் மழை ஊற்றோ
 •  நிகழும் பொழுதெல்லாம் உழைப்பின் இழையன்றோ
 • திகழும் செழுப்பெல்லாம் மழையின் பொழிவன்றோ
 • மழலைச் சிமிழ்எல்லாம்   மகிழ்வின் விழையன்றோ
 • தமிழின் புகழ்எல்லாம் செம்மொழி வழியன்றோ