மெட்ராஸ் ஐ ஜோக்ஸ்
சில வருடங்களுக்கு முன்னாலே இந்த வியாதிக்கு மெட்ராஸ் ஐ என்று பேர் இருந்தது. தற்சமயம் இதை ‘சென்’ ஐ ‘ என்றே அழைக்கிறார்கள்.
1. சென்னைக்கு ஏன் சென்னை என்று பேர் வந்தது என்று பிற்கால சரித்திர ஆசிரியர்கள் இவ்வாறு எழுதக்கூடும்.
“ மெரினா என்ற கடற்கரைக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் மக்கள் எப்போதும் ‘சென் ஐ ‘ என்ற நோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர் போலும். அதனால் தான் அந்த ஊருக்கு சென்னை என்று பேர் வந்திருக்கலாம்.”
2. ஏய் ! எனக்கு பத்து ‘பாய் பிரண்ட்ஸ் ‘ இருக்காங்கன்னு சொன்னா நம்ப மாட்டேன்னு சொன்னியே !. இப்போ பாரு. எனக்கு வந்த ‘சென் ஐ’ நம்ம கிளாஸ்மேட் பத்து பேருக்கு வந்திருக்கு பாரேன்!
3. என்ன வாயெல்லாம் சிவந்திருக்கு? ஜர்தா போட்டியா?
சே ! சே! ‘சென் ஐ’ மாதிரி ‘சென் வாய்.’
4. பண்டிகை நாளும் அதுவும் இப்படி குடிச்சுட்டு வந்திருக்கியே நீ உருப்படுவியா?
சும்மா கத்தாதே கஸ்மாலம் ! கண்ணுலே ‘சென் ஐ’
5. லல்லி! நாய்க்குட்டியோட ரொம்ப கொஞ்சாதேன்னு சொன்னேனே கேட்டியா?
ஏன் ! என்னாச்சு?
உனக்கு வந்த ‘சென் ஐ’ நாய்க்குட்டிக்கும் வந்துடிச்சு.
6. டெலிவெரி சமயத்திலே ஜாக்கிரதையா இருன்னு சொன்னேன். கேட்டாத்தானே?
ஏன் ! என்னாச்சு?
குழந்தைக்கு பிறக்கும் போதே ‘சென் ஐ’.
7. எதிர் கட்சித் தலைவர் மேலே 101வது கேசைப் போடுங்க! குடிச்சுட்டு சட்ட சபைக்கு வந்திருக்கிறாராம்.
சாரி மேடம்! நீங்க நினைக்கிறாப்போலே இல்லை. அவருக்கு கண்ணிலே ‘சென் ஐ’.
8. முதலமைச்சர் வேலை செய்யாத அமைச்சரை எல்லாம் முறைத்துப் பார்த்தார். அவ்வளவு தான். அனைவருக்கும் ‘சென் ஐ’ வந்துவிட்டது.
10. மகாபாரதத்திலே காந்தாரிக்கு ‘சென் ஐ’யாம்மா? எப்பவும் கண்ணைக்கட்டிக்கிட்டே வர்ராங்களே!
11. ராமர் எத்தனை முறை அம்பு விட்டும் ராவணனை ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசியில் அயோத்யாகுப்பத்திலே செய்த அம்பை எடுத்து விட்டார். ராவணனுக்கு இருபது கண்ணிலும் ‘சென் ஐ’ – தோற்று விட்டான்.
12. சிவனால் நக்கீரனை எரிக்க முடியவில்லையா! ஏன்?அவருக்கு நெற்றிக்கண்ணிலே ‘சென் ஐ’.
13. திரௌபதிக்கு பஞ்ச பாண்டவரில் யாரை ரொம்ப பிடிக்கும் என்று குந்திக்கு சந்தேகம். கிருஷ்ணனிடம் கேட்டாள். இன்னிக்கு திரௌபதிக்கு ‘சென் ஐ’ வர வைக்கிறேன். நாளைக்கு யாருக்கு அது வருதோ அவரைத்தான் திரௌபதிக்கு ரொம்ப பிடிக்கும். என்றான். மறு நாள் துச்சாதனுக்கு சென் ஐ வந்தது. ஏனென்றால் அவன் அவள் மேலே எப்போதும் ஒரு கண்ணை வச்சுக்கிட்டே இருந்தான் .