ராமாயண கிரிக்கெட்
அறுபதினாயிரம் டெஸ்ட் ரன்களை குவித்தவரும் இந்நாள் ‘அயோத்யா கிரிக்கெட் கிளப்’ தலைவருமான தசரதன் தன் பிள்ளைகள் ராமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் நால்வரும் கிரிக்கெட் டில் சிறப்பாக இருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டார். அது சமயம் அங்கே வந்த விஸ்வாமித்ரர் சௌத் ஆப்ரிக்காவில் நடக்கும் லோக்கல் மேட்சில் கலந்து கொள்ள ராமனையும் லக்ஷ்மணனையும் கூப்பிட்டபோது அவர்கள் எதிர் காலம் என்னாகுமோ என்று கவலைப்பட்டார்.
சௌத் ஆப்பிரிக்காவில் சூப்பராக அவர்கள் விளையாடியதைப் பார்த்து மனம் மகிழ்ந்த விஸ்வாமித்ரர் மிதிலையில் நடக்கும் புது வித கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள ராம லக்ஷ்மணரை அழைத்துச் சென்றார்.
மிதிலையில் தக தக என்று தங்கத்தினால் ஆன ‘வோர்ல்ட் கப் ‘ ஒன்று பரிசாகக் காத்துக்கொண்டிருந்தது. அருகே மாபெரும் பேட்.. அந்த பேட்டை எடுத்து யார் ஜனகர் போடும் பந்தை சிக்ஸர் அடிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் ‘வோர்ல்ட் கப்’.
ராமன் வந்து பேட்டைத்தூக்கி ஜனகர் போட்ட புல்டாஸ்சை வேகமாக அடிக்க பேட், பந்து, ஜனகரின் அரண்மனை ஜன்னல்கள் எல்லாம் நொறுங்கிப் போயின. ராமனுக்குக் கிடைத்தது வோர்ல்ட் கப் .
தசரதன் மிக மகிழ்ந்து ராமனை அயோத்யா கிரிக்கெட் டீமின் காப்டனாக்க நிச்சயித்து அறிவித்தார்.
உடனே ஏ சி சி யின் மற்றொரு மெம்பர் கைகேயி பரதனைத்தான் கேப்டனாகப் போட வேண்டும் என்று வாதாடினாள் . அதுமட்டுமல்லாமல் ராமன் 14 வருஷம் ‘சென்னை 28ல்’ இருக்க வேண்டும் என்றும் போராடினாள் . கைகேயிக்குக் கொடுத்த சத்தியத்தை எண்ணி கலங்கினான் தசரதன்.
ராமன் தானாகவே சென்னை 28 போவதாக ஒப்புக்கொண்டு வோர்ல்ட் கப்பையும் லக்ஷ்மணனையும் அழைத்துக்கொண்டு வெளியேறினான்.
(தொடரும்)