- ஐந்து கரத்தனை யானை முகத்தனை
- இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
- நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
- புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!
- வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
- நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
- துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
- தப்பாமல் சார்வார் தமக்கு.
- பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
- நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்
- துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
- சங்கத் தமிழ் மூன்றும் தா.
- அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில்பிறந்த
- தொல்லை போம் போகாத்துயரம் போம்
- நல்ல குணமதிக மாமருணைக் கோபுரத்தில் மேவு
- கணபதியைக் கைதொழுதக் கால்.
- விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
- விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே
- விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
- கண்ணிற் பணிமின் கனிந்து.
- மங்கள த்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா
- பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே
- சங்கரனார் தருமதிலாய் சங்கடத்தைச் சங்கரிக்கும்
- எங்கள் குலவிடிவிளக்கே எழில்மணியே கணபதியே
- திருவாக்கும் செய் கருமம் கைகூட்டும் செஞ்சொல்
- பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
- ஆதலால் வானவரும் ஆனைமுகத்தானைக்
- காதலால் கூப்புவார் தம்கை.