வீரபாண்டிய கட்டபொம்மன் லோன் வாங்க வருகிறார்!

வீரபாண்டிய கட்டபொம்மன் லோன் வாங்க வருகிறார்! பராக்!

 image

மேனேஜர் : ஏது வெகு தூரம் வந்து விட்டீர்?

கட்டபொம்மன் : லோன் தருவதாக அறிந்தேன். அதனால் நானே வந்தேன்.

மேனேஜர் : லோன் வேண்டுமானால் அதற்குப்  பழைய லோனைத் திருப்பிக்கட்ட வேண்டும்.

கட்டபொம்மன் :லோன் வாங்குவது எங்கள் இனம். அதை திரு ப்பிக் கட்டுவோம் என்று எதிர் பார்ப்பது அறிவீனம்.


மேனேஜர் : உன் மீது குற்றம் சுமத்துகின்றேன்

கட்டபொம்மன் :என்னவென்று?    image

மேனேஜர் : சொன்னால் எண்ணிலடங்காது!

கட்டபொம்மன் :அது டோட்டல் போடத்தெரியாத குற்றம்.

மேனேஜர் : எனக்கா தெரியாது? கூறுகிறேன் கேள்! மூன்றாம் வருடம் வாங்கிய லோனுக்கு அசல் கட்டவில்லை. அதற்கான வட்டியும் கட்டவில்லை. அதற்கான டாக்குமெண்டிலும் கையெழுத்து போடவில்லை.

கட்டபொம்மன் :அசல், வட்டி, டாகுமெண்ட் – அரசாங்கம் தருகிறது. நாங்கள் அனுபவிக்கிறோம். நீ யார் அதை கெடுக்க? எங்களோடு எம்.எல்.ஏ  வீட்டுக்கு வந்தாயா? அவர் வீட்டு நாய்க்குட்டிக்கு பிஸ்கட் வாங்கிக்கொடுத்தாயா? தாசில்தார் பியூனுக்கு சம்திங் கொடுத்தாயா? அல்லது கட்சிப்பணியில் இருக்கும் மகளிர் அணித் தலைவிக்கு ஜிமிக்கி வாங்கி பணி புரிந்தாயா? மானங்கெட்டவனே! யாரிடம் கேட்கிறாய்  வட்டி? எவனிடம் கேட்கிறாய் டாகுமெண்ட்?

மேனேஜர் : பழய லோனை கட்டாதவர்களுக்கு புது லோன் தரக்கூடாது. இது  ஹெட்  ஆபீஸ் உத்தரவு.

கட்டபொம்மன் :அந்தக்கதை எல்லாம் இங்கே விடாதே அப்பனே! ஸாங்ஷன் இல்லாமலே லோன் வாங்கின அனுபவம் நம்மிடம் ஏராளமாக உண்டு. வேறு ஏதாவது புதுக்கதை இருந்தால் கூறு.

மேனேஜர் : முடிவாகச் சொல்லுகிறேன்! பழைய லோனைக் கட்டிவிடு!

கட்டபொம்மன் :ஆ ! என்ன வார்த்தை சொன்னாய்! இதை என் தமிழ் வாத்தியார் கேட்டிருக்க வேண்டும் ! உன் மீது மொட்டை பெட்டிஸன் போட்டு உன்னை இந்த பிராஞ்ச்சை  விட்டே மாற்றியிருப்பார். என் அண்ணன் கேட்டிருக்க வேண்டும், தன் தள்ளாத வயதிலும் பொல்லாத ஆட்களை கூட்டி வந்து உன்னை  இந்த வங்கியிலே போட்டுத்  தள்ளியிருப்பான். என்  சின்ன வீடு கேட்டிருக்க வேண்டும். உன்னை இந்த ஊரே நடுங்கும் படி கெட்ட வார்தையால் திட்டி தீர்த்திருப்பாள் .

மேனேஜர் : சரி சரி ! கத்தாதே ! உனக்கு  லோன்  ஸாங்சண்ட்  !!