திருப்பாவை – எளிய நடையில்

 திருப்பாவை பாடல்கள் முப்பதையும்  எளிமைப் படுத்தி புத்தகமாக வெளியிட  முயற்சி செய்து வருகிறேன் :

மாதிரிக்கு இதோ:

ஆண்டாள் எழுதிய அழகான திருப்பாவை வரிகள் :

எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனை (ப்) பாடேலோர் எம்பாவாய்

 

எளிய நடையில் அடியேன் எழுதிய வரிகள் : 

அடியே இளங்கிளியே ! இன்னுமா உறங்குகிறாய்
சுடுசொல் சொல்லாதீர் எப்போதோ எழுந்து விட்டேன்
நாங்கள் நன்கறிவோம் வாய்ப்பேச்சுக் காரி நீ
நீங்களும் குறைச்சலில்லை ஏனிந்தக் கூச்சல் ?
துள்ளிவாடி பெண்ணே உனக்கென்ன குறைச்சல்
எல்லோரும் வந்தாச்சா எழுந்துவந்து எண்ணிக்கொள்
கொடியாரைக் கொன்று படியாரை வென்ற
நெடியோன் கண்ணனைப் பாடவா பாவையே !!