பூக்கள் பாடும் சங்கீதம்

பூக்கள் பாடும்   சங்கீதம்

பூக்கள் பாடும்   சங்கீதம்
புல்லாங்குழலோ சந்தேகம்
செடிகள் ஆடிடும் தில்லானா
என்னைக் கேட்டது நலந்தானா !

image

காற்றில் அசையும் இலை ஒலிகள்
தம்பூராவாக மாறியதோ?
மரத்தின் கிளைகள் நெருக்கும் போது
மேளச்சத்தம் கேட்டிடுமோ?

சூரியன் ஜாகிங் செய்யும் போது
சிந்தும் வேர்வை மழைத்துளியோ?
மேகம் பாக்ஸிங் செய்யும் போது
தோன்றும் சத்தம் இடி ஒலியோ?

வானம் நாணி மேகச் சேலை
நழுவி விழுந்தால் முழு நீளம்!
கடலின் மடியில் இளமைச் சூட்டில்
துளிர்க்கும்  வேர்வை கடல் நீரோ?

மொட்டுகள் மெல்ல மலரும் சத்தம்
முத்தம் என்றே பேர் பெறுமோ?
மூங்கில் உரசி எழுப்பும் ஓசை
விரக  தாப எதிரொலியோ?

இலவம் பஞ்சு வெடிக்கும் அழகு
குலவும் பெண்ணின்  முதல் இரவோ ?
இலையின் சருகை மிதிக்கும் ஒலிகள்
இரவில் சிந்தும் வளை ஒலியோ?

பூக்கள் பாடும் சங்கீதம்
காதில் விழுந்தால் சந்தோஷம்!

Advertisements