“ப்ரே பண்ணுவோம் ” பாட்டுக்கு இப்படியும் அழகாக லிரிக்ஸ் எழுதலாம்!
ஏம்ப்பா! நம்ம நாடு ரொம்ப கெட்டுப் போச்சுன்னு நொந்து நூடுல்ஸ் ஆகாம நாட்டுக்காக ஒரு நிமிஷம் ப்ரே பண்ணுங்க ! நம்ம நாட்டு மக்களுக்காக ப்ரே பண்ணுங்க ! ஏன் நம்ம பக்கத்து நாட்டு மக்களுக்கெல்லாம் சேர்த்தே ப்ரே பண்ணுங்கப்பா ! ப்ரே பண்ணுங்க!
உன் பஞ்சம் தீர – லஞ்சம் ஒழிய – வஞ்சம் மாற –நெஞ்சம் உருகி பாரத மாதாவே உனக்காகத்தான்
நீ நலம் பெற– வளம் பெற –புகழ் பெற –தினமும் உனக்காகத்தான் ப்ரே பண்ணுவோம்!
தாய் மண்ணே நீ நல்லரசு வல்லரசாக உனக்காகத்தான் தினமும் ப்ரே பண்ணுவோம்! பாரத மாதா!
நாட்டில் லஞ்சமும் ஊழலும் ஒழிய வேண்டி
வெட்டுகுத்து கொலை கொள்ளை அழிய வேண்டி
ஜாதிமத பேதவெறி தொலைய வேண்டி
நீதிநெறி நியாயம் நேர்மை நிலைக்கத்தான் ப்ரே பண்ணுவோம்
நீ நல்லரசாக, நாங்க ப்ரே பண்ணுவோம்
நீ வல்லரசாக நல்லா ப்ரே பண்ணுவோம்
போதை குடியை மக்கள் மறந்திட நாங்க ப்ரே பண்ணுவோம்
அரசே முன் வந்து டாஸ்மாக்கை மூடிட நாங்க ப்ரே பண்ணுவோம்
நாட்டில் ரௌடி , வன்முறை எல்லாம் அழிந்து போகும் நாளுக்காக ப்ரே பண்ணுவோம்!
அரசு பதவி பண மோகம் இன்றி கடமையை தினம் செய்யும் ஆளுக்காக ப்ரே பண்ணுவோம்!
நீ நல்லரசாக, நாங்க ப்ரே பண்ணுவோம்
நீ வல்லரசாக நல்லா ப்ரே பண்ணுவோம்
நியாயமான தேர்தல் நாட்டில் நடந்திட நேர்ந்து ப்ரே பண்ணுவோம்
நேர்மையானவர்கள் ஆட்சிக்கு வந்திட சேர்ந்து ப்ரே பண்ணுவோம்
உண்மையாக உழைக்கும் மக்கள் வாழ்வில் முன்னேற ப்ரே பண்ணுவோம்
உழைப்பு இல்லா இலவசங்கள் வாங்க மறுக்கும் மக்கள் பெருக ப்ரே பண்ணுவோம்
இந்தியா வல்லரசாக நாங்க ப்ரே பண்ணுவோம்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவோம்
தரமான கல்வி முறை வந்திட வேண்டி
பாரதப் பண்பாடு காத்திட வேண்டி
மாதரின் இழிவு நிலை மாறிட வேண்டி
அன்பான, பண்பான சமுதாயம் உருவாக ப்ரே பண்ணுவோம்.
இந்தியா நல்லரசாக நாங்க ப்ரே பண்ணுவோம்
பாரதம் வல்லரசாக நல்லா ப்ரே பண்ணுவோம்
எல்லா சாமிக்கும் நல்லா ப்ரே பண்ணுவோம்
வாங்க எல்லோருமாக நல்லா ப்ரே பண்ணுவோம்!