விளக்கு

image

 

ஆசை நெய்யிட்டு வேட்கைத் திரியிட்டு
காமத்தீ இட்ட விளக்கு!

விளக்கின் திரியின் நெருப்பின் நுனியில்
கலங்கித் திரிந்து தவிக்கும் மனது !

ஆண்டவன் உள்ளத்தின்  மன விளக்கு!

சூரியன் உலகுக்கு முதல் விளக்கு!

மனைவி இல்லத்தின் குல விளக்கு!

வசந்தம் பொங்கிடும்  சர  விளக்கு!

கவலையைப் போக்கிடும் விடி விளக்கு!

கார்த்திகை நாளில் அகல் விளக்கு!

மங்களம் தந்திடும் குத்து விளக்கு!

பாடம் படிக்கையில் மின் விளக்கு!

பள்ளிக்குத் தேவையோ சிறு விளக்கு!

மிட்டாய்க் கடைகளில் பளீர் விளக்கு!

தன்னை உருக்கிடும் மெழுகு விளக்கு!

தாமதத் தொழிலாம் குழல் விளக்கு!

திசையைக் காட்டிடும் கலங்கரை விளக்கு!

வீதி ஓரங்களில் மஞ்சள் விளக்கு!

வெறியைத் துப்பிடும் சிவப்பு விளக்கு!

காற்றில் அணையா லாந்தர் விளக்கு!

அமுக்கினால் ஒளி  தரும் டார்ச் விளக்கு!

மிதிக்க எரிந்திடும்  சைக்கிள்  விளக்கு!

சீமண்ணையில்  எரிந்திடும் சிம்னி விளக்கு!

வீர விளையாட்டில் தீப விளக்கு!

சபரி மலையில் மகர விளக்கு!