சோம்பேறி ராஜா

 

image

சோம்பேறி   ராஜாவுக்கு   கோயில்     ஒண்ணு     கட்டினா
உற்சவ      மூர்த்தியாய் நான்        இருப்பேன் – அம்மாடி
கோபுர      உச்சியில்    தூங்கிடுவேன் !

பக்த  கோடி       மக்க  ளெல்லாம்
கர்ப்ப கிருகம்      வந்து நின்று
பாட்டுப் பாடி       ஆசி  வேண்டி     வந்திடுவார் !
சாமி  எங்கே      காணோம்டா
செஞ்ச பாவம்     என்னாடா
என்று சொல்லி    புலம்பிடுவார்  – நானோ
கோபுர உச்சியில்   தூங்கிடுவேன் !

காலை      மணி       அஞ்சரைக்கு       கச்சிதமா    எந்திரிப்பேன்
காப்பி       குடிப்பேன்   அப்புறம்           தூக்கம்      பிடிப்பேன்
சனிக்       கிழமை     ராத்திரி            தூங்கப்      போய்
திங்கட்      கிழமை     காலை            எந்திரிப்பேன்
போட்ட      ஷூவைக்   கழட்ட      நேரமில்லை
போட்டுக்    கிட்ட        சட்டையும்        தோய்க்கவில்லை
குளி குளிச்சு ரொம்ப     மாசமாச்சு – அட
ஷேவ்       பண்ணியும்  மாசம்       ஆறாச்சு !
 
காளை      என்னைக்    கட்டிக் கொள்ள
கச்சிதமா    பொண்ணு   வந்தா
விட்டு விடு  சோம்பேறித் தனத்தை    என்றாள்
சரி கண்ணே என்று       விட்டு       விட்டேன்
கிட்ட வாடி  என்று       கட்டிக்       கொண்டேன்
சோம்பேறித் தனத்துக்கு   முழுக்குப்   போட்டேன்
சுறு சுறுப்பாய்  நானும்   மாறி        விட்டேன்

இப்பெல்லாம்

சோம்பேறி   ராணிக்கு    கோவில்    ஒன்று       கட்டினா
உற்சவ      மூர்த்தியாய் அவள்       இருப்பாள் –  நானோ
கோபுர      வாசலில்    காத்திருப்பேன் !!