“பிக் பாக்கெட்! மூஞ்சியையும் முழியையும் பாரு! திருட்டுப் பய! அறைஞ்சு கொல்லணும்!”
“அடிக்காதீங்க! அடிக்காதீங்க! நான் எடுக்கலை ”!
“சும்மா கேட்டா இல்லைன்னு தான் சொல்வானுக! நாலு போட்டா தானா வருது”!
“ஐயோ சாமி.. என் கிட்டே இல்லீங்க! அடிக்காதீங்க”!
“இந்த மாதிரிக் காவாலிப் பசங்களையெல்லாம் நிக்க வைச்சு சுடணும்”
“கொல்லாதீங்க! நான் சத்தியமா எடுக்கலை”!
“என்ன நெஞ்சழுத்தம் பாத்தேளா! கள்ளுணி மங்கனாட்டம் நிக்கறான் பாருங்கோ”!
“வலிக்குது சார்! நான் எடுக்கலை சார்”!
“இவனை சும்மா விடக் கூடாது! அதோ இன்ஸ்பெக்டர் வர்ராறு! அவருக்குத்தான் உண்மையைக் கக்க வைக்கத் தெரியும்!”
“உண்மையைச் சொல்லு ! போலீஸ்காரன் அடி எப்படி இருக்கும்னு தெரியுமா?"
"சார்! இது உங்க பர்சா பாருங்க!”
“ஆமாம் சார் இது.. எப்படி உங்களிடம்….”
“முந்தின ஸ்டாப்பிலே நீங்க ஏறும் போது உங்க பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்தது! எடுத்து உங்க கிட்டே கொடுக்கறதுக்குள்ளே பஸ் கிளம்பிடுச்சு! உடனே ஸ்கூட்டரை எடுத்துக்கிட்டு இந்த ஸ்டாப்புக்கு வந்தா….”
கூடியிருந்த அத்தனை பேர் நெஞ்சுகளையும் ஏதோ ஒன்று நெருடுகின்றதே! அது கோவலனைக் கொன்ற பாண்டியனின் நெருடல்!