மண்ணாங்கட்டி

மண்ணாங்கட்டி

 

image

மண்ணாங்கட்டிக்கு        ஒரு  சுண்ணாம்பு  பொட்டு     வைத்து
       தண்ணீரில்   குளிப்பாட்டி  – அது
கண்ணீரில்   கரைவதைப்   பார்த்து     பார்த்து     அவ
      கைகொட்டிச் சிரிச்சாளாம் …. ஓ
      கைகொட்டிச் சிரிச்சாளாம் !

வாழை      நாரெடுத்து  அழகா      முழம்       தொடுத்து
ரோஜா மாலை      ஒண்ணு     செஞ்சாளாம் – அது
வாடாம     இருக்க      அசங்காமல்  இருக்க
அடுப்புக்     குள்ளே      அதை       வைச்சாளாம் !

ஆட்டம்     ஆடவேண்டி மெட்டு      இட்டுக்      கட்டி
பாட்டுப்     பாடச்       சொல்லிக்   கேட்டாளாம்!
ராகம்       தொடங்கையில்    நாகப் பாம்பு       ஒண்ணு
கழுத்தைக்   கட்டிக்       கொண்ட    கதையாச்சே !

பாட்டி       மத்தெடுத்து  சட்டிப்       பானையிலே
கெட்டித்     தயிரை      நல்லா      கடைஞ்சாளாம்!
வெண்ணை  திரண்டு     வந்து       கண்ணைப்   பறிக்கையிலே
மண்ணைப்  போட்டு     விட்ட       கதையாச்சே !!