மாங்காட்டுப் பாடல்

                                   image       

தங்கமென      வைரமென      ஜொலிக்கின்ற        தாயே!
தாங்காத        துயர்போக்கும் மாங்காட்டுத்           தாயே!
திங்களென     திங்கள்எல்லாம் திகழ்கின்ற          தாயே!
தீங்குகள்       வாராமல்       காக்கின்ற                    தாயே!
துங்கமுக       மைந்தனை     தந்துவிட்ட              தாயே!
தூங்காத        விழியாலே     துயர்நீக்கும்              தாயே!
தெங்கின்இள    நீர்போல        இனிக்கின்ற           தாயே!
தேமதுரத்       தமிழாலே      பாடவைக்கும்         தாயே!
தைவெள்ளித்   திருநாளில்     ஆடவைக்கும்      தாயே!
தொல்லைகளைப் போக்கிவிட   வந்துவிடு        தாயே!
தோல்விகளை வெற்றியாக     மாற்றிவிடு        தாயே!
தௌஹித்ரர்    தவழ்ந்துவர     அருள்தருவாய்  தாயே!
த்ரௌபதி       அம்மனாக      காத்திடுவாய்         நீயே!