ஒரு பக்கக் கதை

பீட்ஸா 

                                 image

அபர்ணாவுக்கு நல்ல செக்ஸி வாய்ஸ். இருபது வயதில் பாப் மியூசிக்கில் இந்தியாவையே கலக்குகிறவள். அவள் மைக் எடுத்து பாட ஆரம்பித்தால் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கும்பலே குதிக்கும். அவளும் அவள் டிரஸ்ஸும் அவளை இந்தியாவின் ‘மடோனா’ வாக மாற்றியது..

அவள் அம்மா சுபத்ராவுக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கவேயில்லை.பின்னே என்ன  எம்‌எஸ்,  எம்‌எல்‌வி  மாதிரி கர்நாடக சங்கீதத்தில் கரைகண்ட சுபத்ராவுக்கு இப்படி ஒரு பொண்ணா? அம்மாவுக்கு அம்மாவா குருவுக்கு குருவா பதினைந்து வருஷம் பாட்டு சொல்லிக் கொடுத்தேனே! இதுக்காடி?மனசு தாங்காமல் கேட்டாள் சுபத்ரா!

“ அம்மா புரிஞ்சுக்கோ! உங்க அம்மா தயிர் சாதம். நீ தோசை! நான் பீட்ஸா!

சுபத்ராவுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை!

                         image