ஒரு பக்கக் கதை

சிரிப்பு 

image

தீபாவிற்கு  அடிக்கடி காரணமில்லாமலே சிரிப்பு வரும். சின்ன வயதிலிருந்து இன்னிக்கி வரை எப்போதும் சிரிப்பு தான். தூக்கத்திலும் சிரிப்பாள். பக பக வென்று வாய்  விட்டு சிரிக்கும் சிரிப்பு அவளுடைய ஸ்பெஷாலிட்டி. அம்மா அடிக்கடி கத்துவாள் – அவுட்டுச் சிரிப்பு சிரிக்காதேடி!

நாளைக்கு அவளைப் பொண்ணு   பார்க்க வருகிறார்கள். வரப்போகிறவன் எப்படி இருப்பான் என்று எண்ணி அதைமட்டும் மனசுக்குள்ளே சிரித்துக் கொள்வாள்.

வந்த மாப்பிள்ளை கத்திரிக்காய்க்கு கையும் காலும் வைச்சது மாதிரி இருந்தான். குபுக்கென்று சிரிப்பு வந்தது அவளுக்கு. ’ பெரிய எடம். சிரிச்சுக் கெடுத்திடாதே..“ அம்மா சிடுசிடுத்தாள்.

"எனக்கு பொண்ணைப்  பிடிச்சிருக்கு’ என்று சொல்லி அவளைப் பார்த்து மெல்ல சிரித்தான்.அந்த  கத்திரிக்காய் மாப்பிள்ளை!

தீபாவின் சிரிப்பு நின்றது. அதற்குப் பிறகு அவளால் சிரிக்கவே முடிவதில்லை – ஆயுசு முழுவதும்.

image