ஒரு பக்கக் கதை

டாக்டர் 

கல்யாணம் ,குழந்தை பெத்துக்கிறது இதையெல்லாம் நினைச்சா ஸ்வேதாவுக்கு பயம்! அப்போது தான் தினத்தந்தியில் விளம்பரத்தைப் படித்தாள். டாக்டர் மிருதுலா தேவியின்  "  A to Z’  ட்ரீட்மெண்ட்டைப்  பற்றி!

லிஸ்டைப் படித்தாள். வேடிக்கையாக இருந்தது! காதலிப்பது எப்படி, கணவனுடன் ஜாலியாக இருப்பது எப்படி, குழந்தை பெத்துக்க  வழி, பெத்துக்காம இருக்க வழி, பால் கொடுப்பது எப்படி, மற்றும் தொப்பை குறைய முகப்பரு போக்க இன்னும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு ட்ரீட்மெண்ட் தருகிறாராம்

                     image

.ஆனால் பாவம் டாக்டர் மிருதுலா தேவிக்கு அம்பது வயதாகியும் இன்னும் கல்யாணமே ஆகலை!