காதல் என்பது நான் என்றால்

காதல்       என்பது      மண்ணானால்      – அதில்    
      மின்னும்    பொன்       துகள்       நீயன்றோ ?
காதல்       என்பது      நெருப்பானால்     – அதில்
      துடித்திடும்   திரியும்      நானன்றோ ?

காதல்       என்பது      காற்றானால்       – அதில்
      தூவிடும்    மகரந்தம்    நீயன்றோ?
காதல்       என்பது      மலையானால்     – அதில்
      பொழிந்திடும் மழையும்    நானன்றோ ?

காதல்       என்பது      நதியானால்        – அதில்
      பொங்கிடும்  நுரையும்    நீயன்றோ ?
காதல்       என்பது      கடலானால்        – அதில்
      அலைபோல் தவிப்பது    நானன்றோ ?

காதல்       என்பது      மதுவானால்       – அது
      தந்திடும்     போதை     நீயன்றோ ?
காதல்       என்பது      தேனென்றால்      – அதைச்
      சேர்ந்திடும்  தேனி       நானன்றோ ?

காதல்       என்பது      நீயென்றால்        – உனைத்
      தொழுதிடும் பக்தன்      நானன்றோ ?
காதல்       என்பது      நானென்றால்      – என் 
      உயிரின்     ஸ்வாஸம்   நீயன்றோ ?