மாங்காட்டுப் பாடல் !

         

சக்கரத்தின்     முன்னின்று     தவம்செய்யும்        தாயே!
சாக்காடு        பிணிஎல்லாம்   போக்கிவிடும்        தாயே!
சிக்கல்களை    நீக்கிவிட்டு     சுகமளிக்கும்         தாயே!
சீக்கிரமாய்      வந்துவிடு      மாங்காட்டுத்         தாயே!
சுக்காக         மருந்தாக       விளங்குகின்ற      தாயே!
சூட்சும         ரூபமாய்        ரட்சிக்கும்            தாயே!
செக்கினிலே    சிக்காமல்       தூக்கிவிட்ட          தாயே!
சேக்கிழார்      போலென்னை எழுதவைத்த         தாயே!
சைகைமொழி   பேசிஎன்னை    மகிழவைத்த         தாயே!
சொக்கத்தங்கம் போலவந்து     சொக்கவைத்த        தாயே!
சோகவிழி      மாற்றிவிட்டு    வாகைதந்த                    தாயே!
சௌபாக்ய      வாழ்வுதந்து     ஆதரிக்கும்                       தாயே!
ஸ்ருங்கார      பார்வைகொண்டு காத்திடுவாய்      நீயே!