ஹோலி ! ஹோலி!

ஹோலி   இந்தியாவில் சிறப்பாகக்   கொண்டாடப்படும்  பண்டிகை.!

நமக்குப் பொங்கல் போல இதுவும் ஒரு அறுவடை திருவிழா தான்.  இன்று அது  வண்ணங்களின் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.  

ஹோலி என்றாலே வண்ண வண்ணப் பொடிகளை ஒருவர் மற்றவர் மீது பூசி விளையாடும் குதூகலம் என்பதை ஹிந்திப் படம் பார்த்த அனைவரும் அறிவோம். 

ஹோலிக்கு புராண கலரும் உண்டு.

நீல வண்ண கிருஷ்ணன் வெள்ளை ராதையின் மீது வண்ணப் பொடிகளைப் பூசி விளையாடி திருப்தி அடைந்தானாம். அதில் துவங்கியது வண்ண வண்ண ஹோலி. 

image

இன்னொரு கதையும் உண்டு. ஹிரண்யகசிபு ‘ஹோலிகா’ என்ற அவனது சகோதரியை பிரகலாதநானுடன் நெருப்பில் இறங்கும்படி கூறினானாம்.. ஹோலிகாவை நெருப்பு சுடாது என்ற வரம் இருந்ததானால் அவளும் தைரியமாக நெருப்பில் இறங்கினாளாம். பகவான் விஷ்ணு ஹோலிகாவை தகனம் செய்து  பிரகலாதனை எரி  படாமல் காப்பாற்றினார்.

தீயதை எரித்து நல்லதைக் காக்கும் செயலாக ஹோலிக்கு முதல் நாள் ஹோலி நெருப்பு வைத்து நம்ம  சொக்கப்பனை மாதிரி . கொண்டாடுகிறார்கள் வட இந்தியாவில்

image

கலர் என்றதும் அந்த நாள் ஜான்சன் & ஜான்சன் கம்பெனியின்  ’ when you see color think of us’ என்ற விளம்பரம் ஞாபகம் வருகிறது.

இப்போது சினிமா நிறுவனமான UTV யின் வண்ணத் தூரிகை ஹோலிக்கு நல்ல உதாரணம்!  

image

( UTV யின் முழு வீடியோவை இந்த லிங்கில் பாருங்கள் – http://vimeo.com/14872328)