மாங்காட்டுப் பாடல் !

         

சக்கரத்தின்     முன்னின்று     தவம்செய்யும்        தாயே!
சாக்காடு        பிணிஎல்லாம்   போக்கிவிடும்        தாயே!
சிக்கல்களை    நீக்கிவிட்டு     சுகமளிக்கும்         தாயே!
சீக்கிரமாய்      வந்துவிடு      மாங்காட்டுத்         தாயே!
சுக்காக         மருந்தாக       விளங்குகின்ற      தாயே!
சூட்சும         ரூபமாய்        ரட்சிக்கும்            தாயே!
செக்கினிலே    சிக்காமல்       தூக்கிவிட்ட          தாயே!
சேக்கிழார்      போலென்னை எழுதவைத்த         தாயே!
சைகைமொழி   பேசிஎன்னை    மகிழவைத்த         தாயே!
சொக்கத்தங்கம் போலவந்து     சொக்கவைத்த        தாயே!
சோகவிழி      மாற்றிவிட்டு    வாகைதந்த                    தாயே!
சௌபாக்ய      வாழ்வுதந்து     ஆதரிக்கும்                       தாயே!
ஸ்ருங்கார      பார்வைகொண்டு காத்திடுவாய்      நீயே!

image

000000000000000000000000000000000000000000000000000000000

image

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

               image

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

image

……………………………………………………………………………………………………

108 Amman Dharshan with POTRI song

 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்திய 

   108 அம்மன்  கோவில் பயணம் 

எழுதியவர்: விஜயலட்சுமி சுந்தரராஜன்

 1. அதிரூப சுந்தரியே சென்னை காளிகாம்பாளே போற்றி! 
 2. ஆதிவழித் துணையே வண்டலூர் இரணியம்மனே போற்றி! 
 3. இடர்களை நீக்கிடும் பொத்தேரி புவனேஸ்வரியே போற்றி!
 4. ஈடில்லா வாழ்வு தரும் திருக்கச்சூர் அஞ்சனாக்ஷியே போற்றி!
 5. உறவுகளைப் போற்றிடும் செங்கல்பட்டு சின்னமுத்துமாரியே போற்றி! 
 6. ஊரார் வணங்கிடும் அச்சரப்பாக்கம் மூங்கிலம்மனே போற்றி!
 7. எங்கும் நிறைந்த முருங்கப்பாக்கம் திரௌபதி அம்மனே போற்றி!
 8. ஏக்கங்கள் தீர்த்திடும் பாண்டிச்சேரி பச்சைவாழியம்மனே போற்றி!
 9. ஐம்புலன் அடக்கிடும் கடலூர் அஞ்சுகிணத்து மாரியம்மனே போற்றி!
 10. ஒப்பில்லா தேவியே தில்லையின் தில்லைஅம்மனே போற்றி!
 11. ஓங்கார சக்தியே சிதம்பரம் தில்லை காளியே போற்றி!
 12. கருணைக்கடலே தில்லை அகிலாண்டேஸ்வரியே போற்றி!
 13. காருண்ய ரூபியே தில்லை காருண்ய மாரியம்மனே போற்றி!
 14. கிரிதரன் சோதரியே சிதம்பரம் சிவகாமசுந்தரியே போற்றி!
 15. கீர்த்தியை அளித்திடும் தில்லை புண்டரீஸ்வரியே போற்றி!
 16. குவலயம் காத்திடும் சிதம்பரம் மஹா முத்து மாரியே போற்றி!
 17. கூர்வாள் ஏந்திடும் தில்லை துர்க்கை அம்மனே போற்றி!
 18. கெட்டதை அழித்திடும் கொள்ளிடம் புலீஸ்வரியே போற்றி!
 19. கேட்டதைத் தந்திடும் கொள்ளிடம் நாகமுத்துமாரியம்மனே போற்றி!
 20. கைகளைப் பற்றிடும் சீர்காழி புற்றடியம்மனே போற்றி!
 21. கொடுமையை அழித்திடும் சீர்காழி சிவகாமசுந்தரியே போற்றி!
 22. கோடி நன்மை தரும் சீர்காழி பத்ரகாளியம்மனே போற்றி!
 23. சந்ததி தந்திடும் சீர்காழி கோமளவல்லியே போற்றி!
 24. சாந்த ஸ்வருபியே சீர்காழி அங்காளபரமேஸ்வரியே போற்றி!
 25. சிந்தையில் நிறைந்திடும் வைத்தீஸ்வரன்கோவில் தையல் நாயகியே போற்றி! 
 26. சீரான வாழ்வுதரும் வைத்தீஸ்வரன்கோவில் துர்க்கை அம்மனே  போற்றி!
 27. சுடரின் ஒளியே திருநன்றியூர் மாரியம்மனே போற்றி!
 28. சூரரை வதைத்திடும் மாயவரம் படைவெட்டி மாரியம்மனே போற்றி!
 29. செருக்கை அழித்திடும் மாயவரம் துர்க்கை அம்மனே போற்றி!
 30. சேர்ந்தார்க்கு ஞானம் தரும் மாயவரம் ஞானாம்பிகையே போற்றி!
 31. சொந்தங்கள் சேர்த்திடும் மாயவரம் பிரசன்ன மாரியம்மனே போற்றி!
 32. சோதனைகள் அகற்றிடும் மாயவரம் சியாமளாதேவியே போற்றி!
 33. சௌபாக்கியம் தந்திடும் மயிலாடுதுறை அபயாம்பாளே போற்றி!
 34. தனங்கள் தந்திடும் மாயவரம் பெரிய மாரியம்மனே போற்றி!
 35. தானாகவே வந்திடும் மயிலாடுதுறை பேச்சாயியம்மனே போற்றி!
 36. திருமணம் வளம் தரும் திருக்கடையூர் அபிராமியே போற்றி!
 37. தீயதை அழித்திடும் ஒழுகைமங்கலம் மாரியம்மனே போற்றி!
 38. துயரினைத் தீர்த்திடும் கீழகாசாக்குடி சீதளாதேவியே போற்றி!
 39. தூயவர் துதித்திடும் காரைக்கால் ஏழை மாரியம்மனே போற்றி!
 40. தெய்வமாய் விளங்கிடும் காரைக்கால் அம்மையாரே போற்றி!
 41. தேயாத வாழ்வு தரும் நாகை நெல்லுக்கடை அம்மனே போற்றி!
 42. தையலர் வழிபடும் நாகை எல்லைஅம்மனே போற்றி!
 43. தொல்லைகள் தொலைத்திடும் நாகை மாகாளியம்மனே போற்றி!
 44. தோல்விகள் நீக்கிடும் நாகை நீலாயதாக்ஷாயணி அம்மனே போற்றி!
 45. நன்மையைத் தந்திடும் பொரவச்சேரி ஸ்வர்ண காளியே போற்றி!
 46. நான்மறை போற்றிடும் பொரவச்சேரி மீனாக்ஷி அம்மனே போற்றி!
 47. நினைத்ததை அருளிடும் பொரவச்சேரி சிங்கார காளியே போற்றி!
 48. நீண்ட கண்ணுடை சிக்கல் வேல் நெடுங்கண்ணியம்மனே போற்றி!
 49. நுண்ணிய அறிவு தரும் கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மனே போற்றி!
 50. நூபுர அழகியே கீழ்வேளூர் சுந்தரகுஜாம்பிகையே போற்றி!
 51. நெக்குருக வைக்கும் அடியக்காமங்கலம் முத்துமாரியம்மனே போற்றி!
 52. நேர்வழி காட்டிடும் திருவாரூர் கமலாம்பிகையே போற்றி!
 53. நொந்தாரை தேற்றிடும் திருவாரூர் ரௌத்ர துர்க்கையே போற்றி!
 54. நோகாமல் காத்திடும் திருவாரூர் சப்த மாதாக்களே போற்றி!
 55. பலபல நலம் தரும் திருவாரூர் நீலோத் பாலாம்பிகையே போற்றி!
 56. பாலருக்கு அருள்தரும் திருவாரூர் காமாக்ஷியம்மனே போற்றி!
 57. பித்தனின் பத்தினியே காட்டூர் ருத்ரகாளியம்மனே போற்றி!
 58. பீடைகள் போக்கிடும் காட்டூர் பிடாரியம்மனே போற்றி!
 59. புலவர்கள் பாடிடும் காட்டூர் மாகாளியம்மனே போற்றி!
 60. பூவையர் வணங்கிடும் காட்டூர் அபிராமியே போற்றி!
 61. பெரியவர் போற்றிடும் காட்டூர் பொற்பவள காளியம்மனே போற்றி!
 62. பேய்மனம் மாற்றிடும் தஞ்சை வாராஹியே போற்றி!
 63. பொறுமையின் உருவே தஞ்சை பெரியநாயகியே போற்றி!
 64. போற்றப் படுபவளே தஞ்சை காசி விசாலாட்சியே போற்றி!
 65. மங்காத புகழுடைய தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷியே போற்றி!
 66. மாசில்லா மாணிக்கமே தஞ்சை கோடியம்மனே போற்றி!
 67. மின்னல் கொடியிடையாள் தஞ்சாவூர் ஆனந்தவல்லியே போற்றி!
 68. மீன்விழியாளே தஞ்சை பாலாம்பிகையே போற்றி!
 69. முக்காலம் உணர்ந்தவளே தஞ்சை ராகுகால துர்க்கையே போற்றி!
 70. மூன்று உலகம் ஆள்பவளே தஞ்சை உஜ்ஜயினி மாகாளியே போற்றி!
 71. மென்மனம் கொண்டவளே தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மனே போற்றி!
 72. மேன்மை தருபவளே புதுக்கோட்டை புவனேஸ்வரியே போற்றி!
 73. மோகம் அழிப்பவளே புதுக்கோட்டை தக்ஷிண காளியே போற்றி! 
 74. வஞ்சகரை வெல்பவளே புதுக்கோட்டை அஷ்டதசபுஜாங்ககாளியேபோற்றி!
 75. வாளினை ஏந்திடும் கானாடுகாத்தான் அய்யனார் காளியே போற்றி!
 76. விண்ணவர் வணங்கிடும் கானாடுகாத்தான் பொன்னழகியம்மனே போற்றி!
 77. வீரத்தின் விளைநிலமே கானாடுகாத்தான் பரமனூர் காளியே போற்றி!
 78. வெல்லமென இனிப்பவளே கோவிலூர் நெல்லை அம்மனே போற்றி!
 79. வேல்விழியாளே காரைக்குடி கொப்புடை அம்மனே போற்றி!
 80. யாவரும் போற்றிடும் திருப்பத்தூர் சிவகாமசுந்தரியே போற்றி!
 81. அன்னையாய் அருளிடும் திருப்பத்தூர் அங்காளபரமேஸ்வரியே போற்றி! 
 82. இன்னல்கள் நீக்கிடும் திருப்பத்தூர் பூமாயி அம்மனே போற்றி!
 83. உன்னத வாழ்வுதரும் மதுரை மீனாக்ஷி அம்மனே போற்றி!
 84. என்னுயிர் காத்திடும் மதுரை மதுரவல்லித் தாயே போற்றி!
 85. கன்னியர் வணங்கிடும் மதுரை காமாக்ஷி அம்மனே போற்றி!
 86. தன்னிகர் இல்லா மதுரை திரௌபதி அம்மனே போற்றி!
 87. மன்னரும் பணிந்திடும் மதுரை தெப்பக்குள மாரியம்மனே போற்றி!
 88. வெண்ணையாய் உருகிடும் திருப்பரங்குன்றம் வெண்ணை காளியே போற்றி!
 89. எண்ணங்கள் நிறைவேற்றும் திருப்பரங்குன்றம் விஷ்ணு துர்க்கையே போற்றி!
 90. மண்ணினைக் காத்திடும் உறையூர் வெக்காளி அம்மனே போற்றி!
 91. அள்ளி அள்ளித்  தந்திடும் ஸ்ரீரங்கம் ரெங்கநாயகியே போற்றி!
 92. உள்ளத்தில் உறைந்திடும் திருவானைக்காவல் மகா மாரியம்மனே போற்றி!
 93. கோள்களின் நாயகியே திருவானைக்காவல் விஷ்ணு துர்க்கையே போற்றி!
 94. கள்ளமில்லா மனத்தவளே திருவானைக்காவல் உமா மகேஸ்வரியே போற்றி!
 95. வெள்ளமென வழிந்திடும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியே போற்றி!
 96. அமுதத்தைத் தந்திடும் சமயபுரம் ஆதி மாரியம்மனே போற்றி!
 97. ராகு கால பூஜை ஏற்கும் சமயபுரம் நாககன்னியம்மனே போற்றி!
 98. பாகுமனம் கொண்டவளே சமயபுரம் பள்ளத்தாளம்மனே போற்றி!
 99. அசுரரை அழித்திடும் சமயபுரம் உஜ்ஜயினி மாகாளியே போற்றி!
 100. சமயத்தில் காத்திடும் சமயபுரம் மாரியம்மனே போற்றி!
 101. ஔஷதம் ஆகிடும் திருப்பட்டூர் பிரம்ம நாயகியே போற்றி!
 102. கௌரவம் காத்திடும் திருப்பட்டூர் காசி விசாலாட்சியே போற்றி!
 103. ரௌத்ரம் தணித்திடும் திருப்பட்டூர் ரேணுகா தேவியே போற்றி!
 104. சௌந்தர்ய ரூபிணியே சிறுவாச்சூர் மதுர காளியம்மனே போற்றி!
 105. பௌர்ணமி நிலவே திருவக்கரை வடிவாம்பிகையே போற்றி!
 106. வக்கிரங்கள் போக்கிடும் திருவக்கரை வக்ர காளியம்மனே போற்றி!
 107. அக்கிரமங்கள் அழித்திடும் திருவக்கரை வைஷ்ணவி முத்தாலம்மனே போற்றி!
 108. அன்னையே செவ்வண்ணமே மேல்மருவத்தூர் ஆதி பராசக்தியே போற்றி! போற்றி!..

108 Amman Dharshan with POTRI song

ஒரு பக்கக் கதை

காதல் 

image    ஷாலினிக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்! உண்மையான காதல்னா என்ன? எல்லாப் பசங்களும் ஜொள்ளுப் பார்ட்டியாகத் தான் தெரிந்தது. எவன் மேலேயும் அவளுக்கு அது இதுவரை வரவில்லை.

கிரண் அவளுடைய நெருங்கிய சிநேகிதி.. ’ டீ ஷாலினி! மனோ ஜெம்டி.அவன் தான் என் லவர்’ என்றாள். அது போன மாதம். ‘மனோ தண்டம்டி குணால் தான் ஸ்வீட். அவன் தான் எனக்கு எல்லாம் என்றாள். இது போன வாரம். ‘கண்ணன் தாண்டி என் காதலன்! அவன் தான் என் உயிர் மூச்சு’ இது முந்தா நாள்.

image

இதுலே எது உண்மையான காதல் என்று ஷாலினிக்குப் புரியவே இல்லை. ஆனா இன்னிக்குக் காலையிலே மழையில் நனையும் போது  குடை குடுத்து உதவினானே ஜெகன்! அவனைப் பார்த்த நிமிடத்தில் ஷாலினிக்கு காதலின் அர்த்தம் புரிந்தது.

வேடிக்கை என்னவென்றால் ஜெகன் கிரணை மனசாரக் காதலிக்கிறான்.!

காதல் என்பது நான் என்றால்

காதல்       என்பது      மண்ணானால்      – அதில்    
      மின்னும்    பொன்       துகள்       நீயன்றோ ?
காதல்       என்பது      நெருப்பானால்     – அதில்
      துடித்திடும்   திரியும்      நானன்றோ ?

காதல்       என்பது      காற்றானால்       – அதில்
      தூவிடும்    மகரந்தம்    நீயன்றோ?
காதல்       என்பது      மலையானால்     – அதில்
      பொழிந்திடும் மழையும்    நானன்றோ ?

காதல்       என்பது      நதியானால்        – அதில்
      பொங்கிடும்  நுரையும்    நீயன்றோ ?
காதல்       என்பது      கடலானால்        – அதில்
      அலைபோல் தவிப்பது    நானன்றோ ?

காதல்       என்பது      மதுவானால்       – அது
      தந்திடும்     போதை     நீயன்றோ ?
காதல்       என்பது      தேனென்றால்      – அதைச்
      சேர்ந்திடும்  தேனி       நானன்றோ ?

காதல்       என்பது      நீயென்றால்        – உனைத்
      தொழுதிடும் பக்தன்      நானன்றோ ?
காதல்       என்பது      நானென்றால்      – என் 
      உயிரின்     ஸ்வாஸம்   நீயன்றோ ?

ஹோலி ! ஹோலி!

ஹோலி   இந்தியாவில் சிறப்பாகக்   கொண்டாடப்படும்  பண்டிகை.!

நமக்குப் பொங்கல் போல இதுவும் ஒரு அறுவடை திருவிழா தான்.  இன்று அது  வண்ணங்களின் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.  

ஹோலி என்றாலே வண்ண வண்ணப் பொடிகளை ஒருவர் மற்றவர் மீது பூசி விளையாடும் குதூகலம் என்பதை ஹிந்திப் படம் பார்த்த அனைவரும் அறிவோம். 

ஹோலிக்கு புராண கலரும் உண்டு.

நீல வண்ண கிருஷ்ணன் வெள்ளை ராதையின் மீது வண்ணப் பொடிகளைப் பூசி விளையாடி திருப்தி அடைந்தானாம். அதில் துவங்கியது வண்ண வண்ண ஹோலி. 

image

இன்னொரு கதையும் உண்டு. ஹிரண்யகசிபு ‘ஹோலிகா’ என்ற அவனது சகோதரியை பிரகலாதநானுடன் நெருப்பில் இறங்கும்படி கூறினானாம்.. ஹோலிகாவை நெருப்பு சுடாது என்ற வரம் இருந்ததானால் அவளும் தைரியமாக நெருப்பில் இறங்கினாளாம். பகவான் விஷ்ணு ஹோலிகாவை தகனம் செய்து  பிரகலாதனை எரி  படாமல் காப்பாற்றினார்.

தீயதை எரித்து நல்லதைக் காக்கும் செயலாக ஹோலிக்கு முதல் நாள் ஹோலி நெருப்பு வைத்து நம்ம  சொக்கப்பனை மாதிரி . கொண்டாடுகிறார்கள் வட இந்தியாவில்

image

கலர் என்றதும் அந்த நாள் ஜான்சன் & ஜான்சன் கம்பெனியின்  ’ when you see color think of us’ என்ற விளம்பரம் ஞாபகம் வருகிறது.

இப்போது சினிமா நிறுவனமான UTV யின் வண்ணத் தூரிகை ஹோலிக்கு நல்ல உதாரணம்!  

image

( UTV யின் முழு வீடியோவை இந்த லிங்கில் பாருங்கள் – http://vimeo.com/14872328)

விஜய் TV யின் மகாபாரதம் 

விஜய் TV யின் மகாபாரதம் புதிய கற்பனை கலந்து இருந்தாலும் சுவாரசியமாக போகிறது. பாத்திரங்கள் எல்லாம் அருமை. குறிப்பாக அர்ஜூன் ,துரியோதனன், கிருஷ்ணன், பீமன், சகுனி, இடும்பி , குந்தி நல்ல பொருத்தமாக இருக்கிறார்கள்.

அர்ஜுனனை முதன்மை ஹீரோவாக கொண்டு வருவது கதைக்கு விறுவிறுப்பு ஏற்றுகிறது!

திரௌபதி அழகாக மாடர்ன் மாடல் பொம்மை மாதிரி இருக்கிறார். ரூபா கங்குலியை மிஞ்சுவாரா என்பதை வரப்போகும் எபிசோடுகள் தான் தீர்மானிக்கும்.

பஞ்ச பாண்டவர்கள் ஜாலியாக ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வது நன்றாக இருக்கிறது.

தயாரிப்பு , காட்சி அமைப்பு, ஒளிப்பதிவு,, தமிழ் டப்பிங், பாடல்கள் எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளன. . தெரிந்த கதை என்று இருந்தாலும் இவர்கள் அதை எப்படிச் சொல்கிறார்கள் என்ற சஸ்பென்ஸ் கதைக்கு சுவாரசியம் கூட்டுகிறது!

தவறாமல் பார்க்க வேண்டிய சீரியல் இது!