மரியாதை

 

காதலுக்கு   மரியாதை  – டும்டும்  மேளம் கல்யாணம் !

காதலிக்கு   மரியாதை  –   அச்சம்  ஆசை   வெட்கம்

காதலனுக்கு மரியாதை  –  வேலியைத்  தாண்டாத   வரை

மனைவிக்கு மரியாதை  –  மடியில் தூங்கும்   குழந்தை

கணவனுக்கு மரியாதை   – பையில் காசு  இருக்கும்   வரை

தங்கைக்கு   மரியாதை – அண்ணன்  வாழ வைப்பான்   என்பது

அண்ணனுக்கு மரியாதை –  மலர் போல் தங்கையைக் காப்பது

தாய்க்கு  மரியாதை  –  மகன்  வைக்கும்  கொள்ளி

தந்தைக்கு   மரியாதை  –  மகன் பிடிக்கும்  பிண்டம்

தம்பிக்கு மரியாதை  – அண்ணன்   இல்லை   என்றால்

மாமனுக்கு  மரியாதை  –   தாயம் விழும் வரை

அத்தைக்கு  மரியாதை   – பெண்ணைக் கொடுக்கும்  வரை

மகளுக்கு    மரியாதை   – தனியா வீட்டுக்கு    வராதவரை

மகனுக்கு    மரியாதை   – மருமகள்    வீட்டுக்கு    வரும்வரை

ஆண்டவனுக்கு மரியாதை –  கவலை மனசில்  இருக்கும்வரை

 அதாவது    உசிரு  உடம்பில்  இருக்கும்வரை !!

ஒரு பக்கக் கதை

தொழில் 

image

மாவு மில்லில் மிளகாய் நெடி நாலூருக்கு வீசியது. சரமாரியா அடுக்குத் தும்மல் வந்தது கோவிந்துக்கு. அரைக்கிற குமாருக்கு மட்டும் எப்படி தும்மலே வரலைன்னு  ஆச்சரியப் பட்டான் கோவிந்து.

image

அதே மாதிரி கணபதி ஹோமப் பகையிலே ஊரோடு சேர்ந்து இவனும் கண்ணைக் கசக்கினான். ஆனால் வெங்குட்டு வாத்தியார் மட்டும் கண்ணைக் கசக்காமல் கணீரென்று மந்திரம் சொன்னார்.

image

அதுபோலவே போனவாரம் கோவிந்து மார்ச்சுவரிக்குப் போயிருந்தான். குடலே வெளி வந்துவிடும் போல வாடை. ஆனால் மார்ச்சுவரி வாட்ச்மேன் செஞ்சி பிரியாணி தின்று கொண்டிருந்தான்.

தொழில் என்று ஒன்று வந்தால் தும்மல், புகை,வாடை எதுவும் வராது என்பதை கோவிந்து புரிந்துகொண்டான்!

கவிதைப் போட்டி

கீழே உள்ள படத்துக்குத் தகுந்தாற்போல நான்கு வரியில் கவிதை எழுதி அனுப்புங்கள்! சிறந்த கவிதைக்கு  Rs. 100/ பரிசு காத்திருக்கிறது!

அனுப்ப வேண்டிய email : ssrajan_bob@yahoo.com 

image

கண்ணை சிமிட்டும் குட்டி நட்டி

:அதன்  அழகிய தமிழ் மொழிபெயர்ப்பு :

கண்ணைச் சிமிட்டும் குட்டி நட்டி
உன்னைப் பார்த்தேன் எட்டி எட்டி
கள்ளம் இல்லா வானுலகில்
துள்ளும் வைரக் கண்ணடி நீ !

தலைப்பில் உள்ள   “கண்ணை சிமிட்டும் குட்டி நட்டி”  ஐ க்ளிக் செய்யவும்.  ‘குட்டி நட்டியின்’  பாட்டைக் கேட்கலாம்! 

கண்ணை சிமிட்டும் குட்டி நட்டி

முருகன் என் காதலன்

 

                         

முருகா      முருகா      வருவாயா?
திருவாய்    திறந்து      தருவாயா?

உன்னைக்   காண       ஓடி         வந்தேன்
என்னை     நானே       தந்து        விட்டேன்
வள்ளிக்     கணவன்     துள்ளி      நின்றான்
வள்ளிக்     கிழங்கென   அள்ளிக்     கொண்டான்
என்னிரு     விழியில்    பள்ளி       கொண்டான்
பன்னிரு     கரத்தால்    பின்னிக்     கொண்டான் !

பழனிப்      பழமாய்     பிசைந்து    விட்டான் 
பழமுதிர்    சோலையாய் மாற்றி      விட்டான் 
செந்தூர்     அலையில்   மிதக்க  வைத்தான் 
தணிகை    மலையில்   தவழ   வைத்தான் 
சுவாமி      அவனைச்   சுற்றி       வந்தேன்
குன்றத்து    வலையில்   சிக்கிக்       கொண்டேன்

முருகா      முருகா      வருவாயா?
திருவாய்    திறந்து      தருவாயா? 

ஒரு பக்கக் கதை

சிரிப்பு 

image

தீபாவிற்கு  அடிக்கடி காரணமில்லாமலே சிரிப்பு வரும். சின்ன வயதிலிருந்து இன்னிக்கி வரை எப்போதும் சிரிப்பு தான். தூக்கத்திலும் சிரிப்பாள். பக பக வென்று வாய்  விட்டு சிரிக்கும் சிரிப்பு அவளுடைய ஸ்பெஷாலிட்டி. அம்மா அடிக்கடி கத்துவாள் – அவுட்டுச் சிரிப்பு சிரிக்காதேடி!

நாளைக்கு அவளைப் பொண்ணு   பார்க்க வருகிறார்கள். வரப்போகிறவன் எப்படி இருப்பான் என்று எண்ணி அதைமட்டும் மனசுக்குள்ளே சிரித்துக் கொள்வாள்.

வந்த மாப்பிள்ளை கத்திரிக்காய்க்கு கையும் காலும் வைச்சது மாதிரி இருந்தான். குபுக்கென்று சிரிப்பு வந்தது அவளுக்கு. ’ பெரிய எடம். சிரிச்சுக் கெடுத்திடாதே..“ அம்மா சிடுசிடுத்தாள்.

"எனக்கு பொண்ணைப்  பிடிச்சிருக்கு’ என்று சொல்லி அவளைப் பார்த்து மெல்ல சிரித்தான்.அந்த  கத்திரிக்காய் மாப்பிள்ளை!

தீபாவின் சிரிப்பு நின்றது. அதற்குப் பிறகு அவளால் சிரிக்கவே முடிவதில்லை – ஆயுசு முழுவதும்.

image

மழைத் துளியில் உதித்து மறுநாளே மாண்டு விடும்      காளான் அல்ல நான்! மழைநீரை உறிஞ்சி தினந்தோறும் குடிக்கும்      ஆலமர வேர் நான் ! பூங்காற்றில் பொதிந்து பனித்துளியில் கரைந்து விடும்      துகள் அல்ல நான்! புயற்கூற்றை எதிர்த்து கடலலையைத் தடுத்து நிமிர்ந்து      நிற்கும் காட்டரண் நான்! மோகத்தில் தவழ்ந்து பெண் மொழியில் திளைத்து      செவ்வாயை சுவைக்கும்  கவிஞனல்ல நான்! மேகத்தைத் துளைத்து விண்வெளியில் பறந்து செவ்வாயைத்     … Continue reading

மீனங்காடி (தொடர்) — நான்காவது பகுதி

மீனங்காடி 
(சென்ற மாதம் முடிவில்………..)

image

அவள் இருக்கையை விட்டு இரண்டடி கூட நடக்கவில்லை. மேஜை மீது இருந்த போன் அடித்தது.ஸ்கூலிலிருந்து பையன் கூப்பிடுவானாயிருக்கும், காலையிலேயே ஜலதோஷம், ஸ்கூலுக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடித்தான். திட்டி அனுப்பி வைத்தாள். இப்போ என்ன பிரச்சினையோ? போனை எடுத்தாள்.

(இனி இந்த மாதம் ! ……………………………)

image

மேரி ! நான் தான் பிரசாத் பேசறேன்”

பிரசாத் அவளது புது டிபார்ட்மெண்டுக்கு மேலதிகாரி !

கடவுளே ! இந்த நேரத்தில் இவரா? இந்த டிபார்ட்மெண்டுக்கு வருவதா வேண்டாமா என்று யோசித்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் இவர்.  ரொம்பவும் திமிர் ஜாஸ்தி ! எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுவதில் கில்லாடி ! நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே போனைக் கீழே வைத்து விடுவார். “ஏன் இந்த வேலையை இன்னும் முடிக்கலை” என்ற கேள்விக்கு நாம் பதில் சொல்லும்போதே, “அதெல்லாம் எனக்குத் தெரியாது, நாளைக்குள்ளே முடிக்கணும்” என்று சொல்லி விட்டு எழுந்து போய் விடுவார்.  கேட்டதையே திருப்பித் திருப்பிக் கேட்கும் வினோத அதிகாரி அவர்.  “ மேரி ! இந்த ஸ்டாண்டர்ட் புராஜக்ட் என்னாச்சு? ஏன் இன்னும் முடிக்கலை?” எல்லோருக்கும் தெரியும் , அது இன்னும் இரண்டு வருஷத்துக்கு முடியாது என்று. இருந்தாலும் இப்படிக் கேட்பதுதான் பிரசாத்தின் வழக்கம்.  இந்த மூணாம் மாடிக்கு இங்கிருக்கிற தொழிலாளர்கள் மட்டுமல்ல, அவர்களின் மேலதிகாரி பிரசாத்தும் ஒரு சாபக்கேடு என்று மேரி எண்ணினாள் !

“ இப்போது தான் டைரக்டர்கள் மீட்டிங் முடிந்து வர்றேன் ! உன் டிபார்ட்மெண்ட் பற்றி விவரமா பேசணும் ! இன்னிக்கு மத்தியானமே !”

கண்டிப்பா வர்றேன் ! ஏதாவது பிரச்சினையா?”

“சேர்மன் சொல்றார். கம்பெனிக்குக் கடுமையான போட்டி இருக்கு ! சமாளிப்பது ரொம்பக் கஷ்டம். நாம இருக்கிற இடத்திலேயே நிற்க இன்னும் அதிகம் ஓட வேண்டியிருக்கும். எல்லா தொழிலாளிகளும் வேலையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளணும் ! உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரிக்கணும் ! சில டிபார்ட்மெண்டுகளில் இருக்கும் மெத்தனமான மந்த போக்குகளைப் பற்றிப் பேசினோம்.”

மேரியின் உடம்பில் ஒரு பயம், நடுக்கம் பரவியது.

“சேர்மன் ஒரு கருத்தரங்குக்குப் போனாராம். நம்ம கம்பெனியில் இருக்கிற மந்தப் போக்கைப் பற்றி மற்றவர்கள் பேசியது ரொம்பவும் அவமானமாயிருந்ததாம். மூணாம் மாடி மட்டும் அப்படி இருக்குன்னு குறிப்பிட்டு சொல்லவில்லை ! ஆனால் இந்த உன்னோட டிபார்ட்மெண்ட் பெரிய தலைவலியாகத் தான் இருக்கு ! நீ என்ன சொல்றே?”

image

“மூணாவது மாடி பற்றி குறிப்பா என்ன சொன்னாங்க?” மேரி கேட்டாள்.

“இந்த டிபார்ட்மெண்டுக்குப் புதுப் பட்டப் பெயர் வைச்சிருக்கார்களாம் ! ‘குப்பைத் தொட்டி டிபார்ட்மெண்ட்’ எவ்வளவு அசிங்கமா இருக்கு ! என் அதிகாரத்தில் இருக்கிற ஒரு டிபார்ட்மெண்டுக்கு இப்படி ஒரு கேவலமான பேரா?”

“குப்பைத் தொட்டி என்று சொன்னார்களா?”

“ ஒரு தடவைக்கு நாலு தடவை சொன்னார். உன்னால், உங்க டிபார்ட்மெண்டால் எனக்கு சரியான டோஸ் கிடைத்தது. தேவையா என்ன? நாம் எடுத்த புது முடிவுகளைப் பற்றி அவங்க கிட்டே சொன்னேன். உன்னை இந்த டிபார்ட்மெண்டுக்கு மேனேஜரா போட்டிருக்கிறதையும் சொன்னேன். ‘சாக்குப் போக்கு எல்லாம் வேண்டாம், இந்த டிபார்ட்மெண்ட் சீக்கிரம் சரியாகணும்’ என்று உத்தரவு போட்டார். நீ  எல்லாவற்றையும் சரி செய்திட்டே இல்லே?”

‘எல்லாவற்றையும் சரி பண்ணிட்டேனா?” வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஏழெட்டு வருஷமா இருக்கிற பிரச்சினை. “

இன்னும் இல்லை” என்று மெதுவாகச் சொன்னாள்  மேரி.

“மேரி ! நீ இன்னும் வேகமா போகணும். உன்னால் முடியாதுன்னா சொல்லு ! உனக்குப் பதிலா வேறு யாரையாவது போடறேன் ! பாஸ் கண்டிப்பா சொல்லிட்டார்.

image

இங்கே இருக்கிற தொழிலாளிகள் அனைவரும் ஒழுங்கா வேலை செய்யணும். அவர்களின் நடவடிக்கைகள்  எல்லாம் சுத்தமா மாறி ஆகணும். அதுக்கு நீ என்ன, எப்படி செய்வாய்னு தெரியாது ! ஆனால் சீக்கிரம் முடிக்கணும். ஏன் இந்த மூணாம் மாடி மட்டும் இப்படி இருக்கீங்க? நீங்க எல்லோரும் ஆபீஸ் வேலை தானே செய்யறீங்க? ஏதாவது ராக்கெட்டா விடறீங்க? உங்களால் கம்பெனிக்கு வெளி மார்க்கெட்டில் எவ்வளவு கெட்ட பெயர்? இதை இனிமே வளர விடக் கூடாது. மீட்டிங்கில் ஒவ்வொரு டைரக்டரும் கேவலமா பேசறாங்க ! உங்க கிழட்டுக் கும்பல் வேலையில் பெரிசா ஒண்ணும் சாதிக்க வேண்டாம். பிரச்சினைகளை உண்டு பண்ணாமல் இருந்தால் போதாதா?” கன்னா பின்னா என்று கத்தினார்.

‘சரி இதைப் பற்றி இன்னும் விவரமா பேசணும் ! எப்ப வர்றே?”

“இரண்டு மணிக்கு வரட்டுமா?”

“இரண்டரைக்கு வா ! சரியா?”

 “கண்டிப்பா” அவள் குரலில் இருந்த கோபம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

“கவலைப்படாதே மேரி ! நீ இதில் இன்னும் தீவிரமா கவனம் செலுத்தணும்”

போனை வைத்து விட்டார்.

"சரியான…….. ” திட்ட வார்த்தை தெரியாமல் தடுமாறினாள் மேரி.

என்ன இருந்தாலும் அவர் பாஸ். சொன்ன விதம் எப்படி இருந்தாலும் விஷயம் என்னமோ நூறு சதவீதம் உண்மை. ‘கவலைப்படாதே மேரி’ தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

(தொடரும்)