ஒரு பக்கக் கதை

பீட்ஸா 

                                 image

அபர்ணாவுக்கு நல்ல செக்ஸி வாய்ஸ். இருபது வயதில் பாப் மியூசிக்கில் இந்தியாவையே கலக்குகிறவள். அவள் மைக் எடுத்து பாட ஆரம்பித்தால் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கும்பலே குதிக்கும். அவளும் அவள் டிரஸ்ஸும் அவளை இந்தியாவின் ‘மடோனா’ வாக மாற்றியது..

அவள் அம்மா சுபத்ராவுக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கவேயில்லை.பின்னே என்ன  எம்‌எஸ்,  எம்‌எல்‌வி  மாதிரி கர்நாடக சங்கீதத்தில் கரைகண்ட சுபத்ராவுக்கு இப்படி ஒரு பொண்ணா? அம்மாவுக்கு அம்மாவா குருவுக்கு குருவா பதினைந்து வருஷம் பாட்டு சொல்லிக் கொடுத்தேனே! இதுக்காடி?மனசு தாங்காமல் கேட்டாள் சுபத்ரா!

“ அம்மா புரிஞ்சுக்கோ! உங்க அம்மா தயிர் சாதம். நீ தோசை! நான் பீட்ஸா!

சுபத்ராவுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை!

                         image

மரியாதை

 

காதலுக்கு   மரியாதை  – டும்டும்  மேளம் கல்யாணம் !

காதலிக்கு   மரியாதை  –   அச்சம்  ஆசை   வெட்கம்

காதலனுக்கு மரியாதை  –  வேலியைத்  தாண்டாத   வரை

மனைவிக்கு மரியாதை  –  மடியில் தூங்கும்   குழந்தை

கணவனுக்கு மரியாதை   – பையில் காசு  இருக்கும்   வரை

தங்கைக்கு   மரியாதை – அண்ணன்  வாழ வைப்பான்   என்பது

அண்ணனுக்கு மரியாதை –  மலர் போல் தங்கையைக் காப்பது

தாய்க்கு  மரியாதை  –  மகன்  வைக்கும்  கொள்ளி

தந்தைக்கு   மரியாதை  –  மகன் பிடிக்கும்  பிண்டம்

தம்பிக்கு மரியாதை  – அண்ணன்   இல்லை   என்றால்

மாமனுக்கு  மரியாதை  –   தாயம் விழும் வரை

அத்தைக்கு  மரியாதை   – பெண்ணைக் கொடுக்கும்  வரை

மகளுக்கு    மரியாதை   – தனியா வீட்டுக்கு    வராதவரை

மகனுக்கு    மரியாதை   – மருமகள்    வீட்டுக்கு    வரும்வரை

ஆண்டவனுக்கு மரியாதை –  கவலை மனசில்  இருக்கும்வரை

 அதாவது    உசிரு  உடம்பில்  இருக்கும்வரை !!

ஒரு பக்கக் கதை

தொழில் 

image

மாவு மில்லில் மிளகாய் நெடி நாலூருக்கு வீசியது. சரமாரியா அடுக்குத் தும்மல் வந்தது கோவிந்துக்கு. அரைக்கிற குமாருக்கு மட்டும் எப்படி தும்மலே வரலைன்னு  ஆச்சரியப் பட்டான் கோவிந்து.

image

அதே மாதிரி கணபதி ஹோமப் பகையிலே ஊரோடு சேர்ந்து இவனும் கண்ணைக் கசக்கினான். ஆனால் வெங்குட்டு வாத்தியார் மட்டும் கண்ணைக் கசக்காமல் கணீரென்று மந்திரம் சொன்னார்.

image

அதுபோலவே போனவாரம் கோவிந்து மார்ச்சுவரிக்குப் போயிருந்தான். குடலே வெளி வந்துவிடும் போல வாடை. ஆனால் மார்ச்சுவரி வாட்ச்மேன் செஞ்சி பிரியாணி தின்று கொண்டிருந்தான்.

தொழில் என்று ஒன்று வந்தால் தும்மல், புகை,வாடை எதுவும் வராது என்பதை கோவிந்து புரிந்துகொண்டான்!

கவிதைப் போட்டி

கீழே உள்ள படத்துக்குத் தகுந்தாற்போல நான்கு வரியில் கவிதை எழுதி அனுப்புங்கள்! சிறந்த கவிதைக்கு  Rs. 100/ பரிசு காத்திருக்கிறது!

அனுப்ப வேண்டிய email : ssrajan_bob@yahoo.com 

image

கண்ணை சிமிட்டும் குட்டி நட்டி

:அதன்  அழகிய தமிழ் மொழிபெயர்ப்பு :

கண்ணைச் சிமிட்டும் குட்டி நட்டி
உன்னைப் பார்த்தேன் எட்டி எட்டி
கள்ளம் இல்லா வானுலகில்
துள்ளும் வைரக் கண்ணடி நீ !

தலைப்பில் உள்ள   “கண்ணை சிமிட்டும் குட்டி நட்டி”  ஐ க்ளிக் செய்யவும்.  ‘குட்டி நட்டியின்’  பாட்டைக் கேட்கலாம்! 

கண்ணை சிமிட்டும் குட்டி நட்டி

முருகன் என் காதலன்

 

                         

முருகா      முருகா      வருவாயா?
திருவாய்    திறந்து      தருவாயா?

உன்னைக்   காண       ஓடி         வந்தேன்
என்னை     நானே       தந்து        விட்டேன்
வள்ளிக்     கணவன்     துள்ளி      நின்றான்
வள்ளிக்     கிழங்கென   அள்ளிக்     கொண்டான்
என்னிரு     விழியில்    பள்ளி       கொண்டான்
பன்னிரு     கரத்தால்    பின்னிக்     கொண்டான் !

பழனிப்      பழமாய்     பிசைந்து    விட்டான் 
பழமுதிர்    சோலையாய் மாற்றி      விட்டான் 
செந்தூர்     அலையில்   மிதக்க  வைத்தான் 
தணிகை    மலையில்   தவழ   வைத்தான் 
சுவாமி      அவனைச்   சுற்றி       வந்தேன்
குன்றத்து    வலையில்   சிக்கிக்       கொண்டேன்

முருகா      முருகா      வருவாயா?
திருவாய்    திறந்து      தருவாயா?