ஒன்று

   image

அன்று முதல் இன்று வரை ஒன்று நன்று !
என்றும் இதைக் கண்டு கொண்டால் நன்று ஒன்று !

கடவுள் ஒன்று காட்சி ஒன்று காதல் ஒன்று
உலகம் ஒன்று உண்மை ஒன்று உணர்வு ஒன்று

கணவனும்  மனைவியும் ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –   மழலை

எண்ணமும்  எழுத்தும்   ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –    கவிதை

இதயமும்    இதயமும்  ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –       காதல்     

இதழும்      இதழும்    ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று   –      முத்தம்         

கையும்      தூரிகையும்  ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –     ஓவியம்

சித்தியும்     புத்தியும்    ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –          பக்தி

பரமனும்     பக்தனும்    ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –      முக்தி

கனவும்      கருத்தும்    ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –     காவியம்

குரலும்       பயிற்சியும்  ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –     கானம்

செயலும்     முயற்சியும்  ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –     வெற்றி

ஆறும்       ஐந்தும்      ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –            ஆரஞ்சு

ஐந்தும்       ஆறும்      ஒன்றாகும்போது 
பிறப்பது ஒன்று –     பதினொன்று

image