குழந்தைக் கவிதை

குழந்தைக் கவிஞர்கள் – அழ வள்ளியப்பாக்கள்
ஆயிரம் பேர் வந்துவிட்டனர் எழுதிக் குவிக்க!
சொல்வனத்திலும் கவிதைப் பூங்காவிலும் 
குழந்தை கவிதைகள் ஆயிரம் ஆயிரம்!
குழந்தையையும் கடவுளையும் இணைத்து எத்தனை வரிகள்! 

  • image

சூரியன் உதிப்பது குழந்தையின் கண்மணி காண
நிலா வருவது  குழந்தைக்கு சோறு ஊட்ட!
பூமிக்கு ஒத்தடம் குழந்தையின் காலடி!
கரடிப் பொம்மை குழந்தையை அணைத்த கடவுள்!
எச்சல் தெறிக்கும் குழந்தை குற்றாலத்து சாரல்!
கொட்டாவி விடும் குழந்தை காற்றுக்கு குதூகலம்!
நடை பழகும் குழந்தை நில மடந்தைக்கு வருடல்!
விம்மும் குழந்தை கடவுளின் உயிர்த் துடிப்பு!

எல்லாம் சரி! பின்னர் ஏன் இந்த வசனம்!

“அழுகையை நிறுத்து சனியனே!
அறைஞ்சு கொன்னுடுவேன்!”