தமிழ்ப் புத்தாண்டு

விழா நாட்களில் நம்ம வீடுகளில் போடப்படடும் தலைவாழை இலை சாப்பாட்டின் மகத்துவமே தனி!

image

அது சரி! தமிழ்ப் புத்தாண்டு அன்று என்ன ஸ்பெஷல் சாப்பிடலாம் ?

சாதம் – பருப்பு – நெய்  – கல்யாண சாம்பார்  –  வடாம்

வேப்பம்பூ ரசம் – கோசுமல்லி – அவியல் -பப்படம் 

தயிர்வடை – சக்கைப் பிரதமன் 

புளியோதரை – மாங்காய்  பச்சடி

தயிர் – இஞ்சி புளி  – மோர் மிளகாய்

முக்கனி – வாழைப்பழம் – மாம்பழம்-பலாப்பழம் 

வெத்திலை (கும்பகோணம்) – பாக்கு (ரசிக்லால்) -சுண்ணாம்பு (டி‌எஸ்‌ஆர்) 

சில ஸ்பெஷல் ஐட்டங்களை எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம்! 

(For authentic recipe view at : http://www.jeyashriskitchen.com/)

மாங்காய்ப் பச்சடி:

image

தேவையான பொருட்கள்:

மாங்காய் -1; வெல்லம்  – ½ கப்  ; உப்பு – ஒரு சிட்டிகை;  எண்ணை : ¼ டீ . ஸ்பூன் ; கடுகு : ¼ டீ.ஸ்பூன் ; சி.மிளகாய் -1

செய்முறை:

மாங்காயின் தோலை உரித்துத் துண்டுகளாகப் போட்டுக்கொள்ளவும். வாணலியில் மாங்காய் துண்டுகளுடன் ½ கப் தண்ணீர் , உப்பையும் சேர்த்து மாங்காய் மிருதுவாகிற வரைக்கும் வேக வைக்கவும். (மாங்காய் தெரியாமல் இருக்க வேண்டுமென்றால் குக்கரில் வேக வைக்கவும்).

வெல்லத்தை குறைந்த அளவு தண்ணீர் விட்டுக்  கரைத்து, பிறகு வடிகட்டி  ஐந்து நிமிடம் கொதிக்க வையுங்கள். இப்போது மாங்காய்த்  துண்டுகளைப் போட்டு நன்றாகக் கலந்து மேலும் 3-5 நிமிடம் கொதிக்க வைக்கவும். கடுகையும் மிளகாயும் தாளித்து  அதில் சேர்க்கவும்.

மாங்காய் பச்சடி ரெடி.

 

 கோசுமல்லி

image

தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு ¼ கப், கேரட் -1, வெள்ளரி -1, உப்பு, எண்ணை ½ டீ ஸ்பூன், கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், துருவிய தேங்காய், எ.பழம் சாறு 1 டீ ஸ்பூன், கொத்தமல்லி தழை,

ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் பாசிப் பருப்பைப் போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீரை வடித்து வாயகன்ற பாத்திரத்தில் வெந்த பாசிப் பருப்பைப் போடவும். கேரட்டையும்  வெள்ளரியையும் , துறுவி பருப்புடன் உப்பு சேர்த்து கலக்கவும். கடுகு,பெருங்காயம், ப.மிளகாய்,கொத்தமல்லி இவற்றைத் தாளித்து அதில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, எ.பழம் சாற்றையும் சேர்க்கவும். துருவிய தேங்காயை பரிமாறுமுன் சேர்க்கவும்.

  கோசுமல்லி ரெடி !

 

தயிர் வடை:

image

தேவையான பொருட்கள்:

 வடை-4; துருவிய தேங்காய்- 4 டேபிள்  ஸ்பூன்; ப.மிளகாய்: 2; தயிர் -2 கப்; ஜீரகம்: ¼ டீ .ஸ்பூன்; உப்பு: தேவையான அளவு; காரட் துருவியது: ½ டேபிள்  ஸ்பூன்;கொத்தமல்லி, கடுகு, பெருங்காயம்,கருவேப்பிலை

வடையைத் தயார் செய்த பிறகு கொஞ்சம் ஆற வைக்கவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பின் சூட்டைக் குறைத்து விட்டு ஒவ்வொன்றாக 6-8 செகண்ட் போட்டு எடுக்கவும். வடையில் இருந்த தண்ணீரை மெதுவாக கைகளில் அழுத்தி எடுக்கவும். இது வடைகளை மிருதுவாக வைக்க உதவும்.

தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம் இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீருக்குப் பதிலாக தயிரை விட்டு அரைக்கவும். பாக்கி தயிரை நன்றாக கடைந்து தேங்காய் பேஸ்ட், உப்புடன்  சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடுகு, பெருங்காயம்,கருவேப்பிலை தாளித்து அத்துடன் சேர்க்கவும். பிறகு வடைகளை  இதில் போட்டு, துருவிய கேரட், பூந்தி, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும். 

தயிர் வடை ரெடி !

சக்கைப் பிரதமன்:

image

தேவையான பொருட்கள்:

பலாச் சுளைகள்: 10-15 ; வெல்லம் :½ கப்; திக்கான தேங்காய்ப் பால் : ½ கப்; முந்திரிப் பருப்பு: 5-7; நெய்: 1 டேபிள் ஸ்பூன்.

பலாச் சுளையை நன்றாக அலம்பி கொட்டை எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அவற்றை லேசாக 2 நிமிடம் நெய்யில் வதக்கி, பிறகு குக்கரில் தண்ணீர் விட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். பிறகு அவற்றை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை ½ கப் தண்ணீர் விட்டு கரைத்து குப்பைகளை வடிகட்டி, 3 நிமிடம் லேசான சூட்டில் கொதிக்க வைக்கவும். அதில் பலாசுளைப் பேஸ்ட்டைக் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். தேங்காய்ப் பாலை அத்துடன் கலந்து  மேலும் 2 நிமிடம் லேசான சூட்டில் கொதிக்க விடவும். (ரொம்ப நேரம் கொதித்தால்  கெட்டு விடும்). முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும்.

சக்கைப் பிரதமன் ரெடி.

சூடாகவோ, குளிர வைத்தோ சாப்பிடலாம்.    

 

புளிக்காச்சல்:

image

தேவையான பொருட்கள்:

1)       க. பருப்பு 1 டேபிள் ஸ்பூன்; உ.பருப்பு 1 டேபிள் ஸ்பூன் ; தனியா 1 ½ டேபிள் ஸ்பூன்; சி.மிளகாய்; 6-7; எள்: 1 டீ.ஸ்பூன்; மிளகு: 1 டேபிள் ஸ்பூன்;

2)       எண்ணை : 4-5 டேபிள் ஸ்பூன்; கடுகு -¼ டீ ஸ்பூன்; வேர்க்கடலை -1 டேபிள் ஸ்பூன்; க.பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்; கருவேப்பிலை;

3)       திக் புளித்தண்ணி  1 ½ கப்; மஞ்சப் பொடி -¼ டீ.ஸ்பூன்; பெருங்காயம் : கொஞ்சம்;  வெல்லம்: ¼ டீ.ஸ்பூன்

   முதல் எண்ணில் குறிப்பிட்ட பொருட்களை நன்றாக வறுத்து (எள்ளைக் கடைசியில் சேர்க்கவும்), ஆற வைத்து, மிக்ஸ்யின் நன்றாகப் பொடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணை விட்டு நம்பர் 2ல் குறிப்பிட்டுள்ள மற்றவற்றைப் போட்டு தாளிக்கவும். பருப்பு பொன்னிறமாக மாறும் போது புளித்தண்ணியை விட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கத் தொடங்கும் போது அரைத்து வைத்துள்ள பவுடர்களுடன், ம.பொடி, உப்பு, வெல்லம், பெருங்காயம் போடவும். குறைந்த நெருப்பில் பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைத்து சரியான பதம் வந்ததும் இறக்கவும்.

புளிக்காச்சல் ரெடி.

சாதத்துடன், நல்லெண்ணை விட்டு தேவையான அளவு புளிக்காச்சலை விட்டு மெதுவாகப் பிசைந்தால் புளியஞ்சாதம் ரெடி.

கல்யாண சாம்பார்:

தேவையான பொருட்கள்:

1)       து.பருப்பு – ½ கப்; புளி 1 எ.பழம் அளவு; சாம்பார் பவுடர் -½ டீ.ஸ்பூன்; நறுக்கிய கத்திரிக்காய், கேரட், கேப்சிகம், உ.கிழங்கு  -1;

2)       தனியா -3 டீ.ஸ்பூன்; உ.உ.பருப்பு -2 டீ  ஸ்பூன்; ஜீரகம் – 1 டீ  ஸ்பூன்; சி.மிளகாய் -4;பெருங்காயம்;

3)       கடுகு, சி.மிளகாய் -1, கருவேப்பிலை, எண்ணை 3- டேபிள் ஸ்பூன் , உப்பு

  புளியை ½ கப் தண்ணீர் விட்டு திக்காகக் கரைத்துக் கொள்ளவும்.

துவரம் பருப்பைக் குக்கரில் வைத்து நன்றாக மசியும் வரை ( 4-5 விசில்) வேகவைக்கவும்.

நம்பர் 2 ல் குறிப்பிடுள்ளவற்றை லேசாக எண்ணை விட்டு வறுத்து மிக்ஸியில் பேஸ்டாகவோ,பொடியாகவோ அரைத்து வைக்கவும்.

பிறகு நறுக்கிய காய்கறிகளை நன்றாக வதக்கிய  பின், புளித்தண்ணி , உப்பு,சாம்பார் பொடி, தண்ணீர்(தேவையான அளவு) சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். (3-4 நிமிடம்)

பிறகு பருப்பு மசியலைப்  போட்டு  மேலும் 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

அதில், பொடித்து வைத்த பவுடர் (அல்லது) பேஸ்டைப் போட்டு பச்சை வாடை போகும் அளவுக்கு கொதிக்க வைக்கவும். திக்காக வேண்டும் என்றால் சிறிது அரிசி மாவைக் கலந்து கொதிக்க வைக்கவும்.

கல்யாண சாம்பார் ரெடி.

வேப்பம்பூ ரசம்:

image

சாதாரண தக்காளி ரசம் வைத்து விட்டு, அதில், காய்ந்த  வேப்பம்பூவை நெய்யில் வறுத்துப் போட்டால் வேப்பம்பூ ரசம் ரெடி.

அவியல்:

image

தேவையான பொருட்கள்:

கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு,வாழைக்காய்,சேனை,முருங்கைக்காய்,சௌ சௌ , வெள்ளை பூசணி,மஞ்சள் பூசணி, புடலை,பட்டாணி,(வேர்க்கடலை?), தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம், தேங்காய் எண்ணை , கருவேப்பிலை, தயிர்

கடலையை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

காய்கறிகளை ½ அங்குலம் நீளத்துக்கு வெட்டி, கொஞ்சம் உப்பைச் சேர்த்து குக்கரில் 15 நிமிடம் வேகவைக்கவும். புடலங்காய்,வெள்ளை பூசணி, முருங்கைக்காய் இவற்றை தனியாக வேகவைத்து சேர்த்துக் கொள்ளவும். கடலையும் சேர்க்கவும்.

மிளகாய்,தேங்காய்,ஜீரகம் இவற்றை மிக்ஸியில் பேஸ்டாக அறைத்துக் கொள்ளவும்.

கடாயில் வேகவைத்த காய்கறிகளுடன், அரைத்து வைத்த பேஸ்ட்டையும் மெதுவாக கலந்து,(காய்கள் குழைந்து போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.). நன்றாகக் கொதித்தபின், ஸ்டவ்வை  அணைத்து அவற்றுடன் தேங்காய் எண்ணையை நன்றாகக் கலந்து தயார் செய்யவும்.

அவியல் ரெடி.