தலையங்கம்

ஏப்ரல்   2014 

                         பூ : ஒன்று ———————- இதழ் : ஐந்து  

image

வரப் போகிறது என்ற பாராளுமன்றத் தேர்தல் வந்தேவிட்டது. 
யாருக்கு எவ்வளவு சொத்து – எந்த வேட்பாளர் மனு தாக்கல் செய்தபிறகு கட்சி மாறினார்- எந்தக் கட்சிக்கு வேட்பாளரே இல்லாத கொடுமை – இதெல்லாம் நமக்கு கிடைக்கிற சில்லறை சிரிப்புகள்!

காமெடியின் உச்ச கட்டம் – 2ஜி புகழ் ராஜாவுக்கு எதிரான பி.ஜே.பி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.  

பல கட்டங்களாக நடைபெறும் தேர்தல் தமிழ் நாட்டில் ஏப்ரல் 24 ந் தேதி நடைபெறப் போகிறது.  

கருத்துக் கணிப்புகளும் அரசியல் ஆரூடங்களும் கிளி ஜோசியர் கணக்கில் வந்துகொண்டிருக்கின்றன. 

முடிவு வரும் போது சென்னை வெயிலும் தன் பங்குக்கு பட்டையைக் கிளப்பப் போகிறது! 

ஜெயித்தவர்கள் கெத்தாகப் பேசுவதும், தோற்றவர்கள் சதவீதக் கணக்கில் புள்ளி விவரமாகச் சொல்லுவதும், ஓட்டைப் போட்டவன் தொடர்ந்து ஓட்டாண்டியாகத் திரிவதும் நமக்கு வாடிக்கையாகப் போய்விட்டது, 

காங்கிரஸ் கலயத்தில் கஞ்சி குடித்த நாம் இனி பி.ஜே.பி சட்டியில் குடிக்க நேரலாம். ரெண்டும் ஓட்டை தான். கிழிஞ்ச சட்டையைத் தூக்கி எறிந்து விட்டு நைந்த சட்டையை போட்டுக்கப் கொள்ளப் போகிறோம் . ரெண்டும் ஓட்டை தான். பழைய ஓட்டைப் போட்டு புதிய ஓட்டையை வாங்கப் போகிறோம்.

2G ,நிலக்கரி, ஹெலிகாப்டர் போன்ற ஊழலுக்குப் பதிலாக ரயில்,கடல்,ஆகாயம் என்று வேறு ஏதாவது புதியதாக ஊழல் வரும். 

இப்படி நம்பிக்கை இல்லாமல் பேசுவது சரியா என்று கேட்கலாம்!

என் கருத்து தவறு என்று காலம் நிரூபித்தால் என்னை விட சந்தோஷம் அடைபவர் . யாரும் இருக்க மாட்டார். 

===================================================

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191   
email : ssrajan_bob@yahoo.com

===================================================

.