பொன்மகள் வந்தாள் ( நித்யா சங்கர்)

image

image

(ஆதி சங்கராச்சார்யார்   அவர்களின் கனகதாரா ஸ்தோத்ரங்களைப்   படித்தால் லக்ஷ்மி தேவியின் அருட்பார்வை உங்களுக்குக் கிட்டும் என்பதில் ஐயமில்லை.)

மீதமுள்ள பாடல்கள் அடுத்து வரும் குவிகம்

இதழ்களில் வரும்.

மீனங்காடி ( ஐந்தாம் பகுதி)

வழக்கத்திற்கு மாறாக …………….

image

மேரி படிகளில் இறங்கி வழக்கம் போல ஏரிக்கரைக்கு மதிய உணவிற்காகச் சென்று கொண்டிருந்தாள். கால்கள் நடந்தன. ஆனால் மனம் மட்டும் பிரசாத் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தது.  இன்னும் கொஞ்ச தூரம் அதிகம் நடந்தால் நல்லது என்று அவளுக்குத் தோன்றியது. ‘குப்பைத் தொட்டி டிபார்ட்மெண்ட்’ – அந்தப் பெயர் அவள் மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது. குப்பைத் தொட்டியை எப்படித் தூக்கி எறிவது? ஏதாவது செய்யணும் !

யோசித்துக் கொண்டே நடந்ததில் மேரி இதுவரை வராத புதுப் பகுதிக்கு வந்து விட்டாள். ‘ஹோய். ஹோய்’ என்று பலர் சிரிக்கும் சத்தம் கேட்டபிறகு தான் அவளுக்குப் புரிந்தது – தான் மீன் மார்க்கெட் பக்கம் வந்து விட்டோம் என்று. அது ஒரு பிரபலமான மீன் மார்க்கெட். அதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாள். மிக உயர்ந்த ரக மீன்கள் எல்லாம் கிடைக்கும் என்று.ஆனால் அவள் பொருளாதார நெருக்கடி – இரண்டு குழந்தைகளின் பராமரிப்பு அவளை அங்கு வர விடுவதில்லை.ஜானுக்காக வாங்கிய கடனைக் கட்டிய பிறகு தான் மற்ற வசதிகள் எல்லாம்.

அந்த மார்க்கெட் பக்கம் போவது இதுதான் முதல் தடவை.
அங்கே இருக்கிற எண்ணற்ற மீன் கடைகளில் மீனங்காடி என்ற கடையில் மட்டும் ஏராளமான கும்பல் இருப்பதைக் கவனித்தாள்.  அங்கிருந்துதான் அந்த ‘ஹோய் ஹோய்’ சிரிப்புச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கடையைச் சுற்றிக் கத்திச் சிரிக்கும் அவர்களைப் பார்த்தால் வேடிக்கையாக இருந்தது. அவளுக்கும் அந்த சிரிப்பு அலை தொற்றிக் கொள்ளும்படி இருந்தது. ஆனாலும் தன் மண்டையில் ஓடும் எண்ண அலைகளினால் சீரியஸாகவே இருந்தாள்.

image

கொஞ்சம் ஆர்வத்துடன் உள்ளே என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்தாள். சரி ஏதோ வித்தை காட்டி  தமாஷ் பண்ணுகிறார்கள் என்று அவர்களை விட்டு விலகிப் போகப் பார்த்தாள். அப்போது தான் அவள் மண்டையில் தட்டுப்பட்டது – அட நமக்கும் கொஞ்சம் வேடிக்கை, சிரிப்பு தேவைப் படுகிறது என்று. கும்பலின் மையத்துக்குப் போனாள்.

அங்கே மீன் விற்றுக் கொண்டிருந்த ஒருத்தன் சத்தமாகக் கத்தினான். “ஹாய் ! டீ கப் வீரர்களே !” அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும் தங்கள் கையில் இருந்த பிளாஸ்டிக் டீ கப்பைத் தூக்கி உயர்த்தி ‘ஹாய்’ என்று கத்தினார்கள் – நன்றாக டை கட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கும் அந்த பத்து இருபது பேரும். ‘இதென்ன கூத்தாயிருக்கு?’ என்று மேரி மனதிற்குள்ளேயே எண்ணிக் கொண்டாள்.

(தொடரும்) 

குழந்தைக் கவிதை

குழந்தைக் கவிஞர்கள் – அழ வள்ளியப்பாக்கள்
ஆயிரம் பேர் வந்துவிட்டனர் எழுதிக் குவிக்க!
சொல்வனத்திலும் கவிதைப் பூங்காவிலும் 
குழந்தை கவிதைகள் ஆயிரம் ஆயிரம்!
குழந்தையையும் கடவுளையும் இணைத்து எத்தனை வரிகள்! 

  • image

சூரியன் உதிப்பது குழந்தையின் கண்மணி காண
நிலா வருவது  குழந்தைக்கு சோறு ஊட்ட!
பூமிக்கு ஒத்தடம் குழந்தையின் காலடி!
கரடிப் பொம்மை குழந்தையை அணைத்த கடவுள்!
எச்சல் தெறிக்கும் குழந்தை குற்றாலத்து சாரல்!
கொட்டாவி விடும் குழந்தை காற்றுக்கு குதூகலம்!
நடை பழகும் குழந்தை நில மடந்தைக்கு வருடல்!
விம்மும் குழந்தை கடவுளின் உயிர்த் துடிப்பு!

எல்லாம் சரி! பின்னர் ஏன் இந்த வசனம்!

“அழுகையை நிறுத்து சனியனே!
அறைஞ்சு கொன்னுடுவேன்!”

ஈஶ்வர உவாச ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராமனாம வரானனே ஶ்ரீராம னாம வரானன ஓம் னம இதி  ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராமனாம வரானனே ஶ்ரீராம னாம வரானன ஓம் னம இதி  ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராமனாம வரானனே ஶ்ரீராம னாம வரானன ஓம் னம இதி 

திங்கள்!

image

ஏன் பிறந்தாய்  என்று  உனைத் திட்டுபவர்   பலர் !
வார  முதல்நாளே ! தடுமாறும்  என்  தாளே!
இரவில் மட்டும்  வரும் இரவு ராணியே!
இரவில் மட்டும்   பூக்கும்  புதுமலரே
உன்   கன்னக்  கதுப்பில்  அப்படி  என்ன கறை ?
கலை  மாறா  கதிரவன்  கடித்தவடுவா ?               
பருவக்  கோளாறில்  வெடிக்கும்   பருக்கூட்டமா ?

பாடல் பல கோடி பெற்ற  திருத்தலமே !                      
சூடேற்றும் குளிர் பானமே!முரண் தொடையே !
இருட்டிலும்  காய்கிறாய்! காய  வைக்கிறாய் !
மேக  மேலாடை இன்றி அடிக்கடி பவனி  வருகிறாய்!
நட்சத்திர சேடிகளுடன் உலா  வருகிறாய் !
வானமென்னும்   வீதியில்  பூனை நடை புரிகிறாய் !
ஒளிந்து  ஒளிந்து  என்னை  எட்டிப் பார்க்கிறாய் !

image

எங்கள்  கால் உன்  மேனியில்   பட்டதில்  வருத்தம்  தானே !
உன்னைக்   காட்டி சோறு  ஊட்டிய  நாங்கள்
உன்மடியில்  அமர்ந்து  சோறு  உண்பது எப்போது ?
வெள்ளி  முலாம்  பூசிய  கருப்பு நிற  அழகியா இல்லை 
கருப்புச் சாயம் பூசிய  வெள்ளைக்    காரியா ?

பித்தனுக்கு  நீ  பிறை!  சித்தனுக்கு  நீ  சிறை !
கவிஞனுக்கு நீ  கலை! காதலனுக்கு நீ  சிலை !
பௌர்ணமிப்  பார்வையில் வெறி  ஊட்டுகிறாய்!
அம்மாவாசைப்  போர்வையில் காதல்  சல்லாபம்!

ஒரே ஒரு சந்தேகம்!

நீ  பூமிக்குக்  காவலா  இல்லை பாலுக்குத் தோழியா ?

 ஒன்று

   image

அன்று முதல் இன்று வரை ஒன்று நன்று !
என்றும் இதைக் கண்டு கொண்டால் நன்று ஒன்று !

கடவுள் ஒன்று காட்சி ஒன்று காதல் ஒன்று
உலகம் ஒன்று உண்மை ஒன்று உணர்வு ஒன்று

கணவனும்  மனைவியும் ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –   மழலை

எண்ணமும்  எழுத்தும்   ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –    கவிதை

இதயமும்    இதயமும்  ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –       காதல்     

இதழும்      இதழும்    ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று   –      முத்தம்         

கையும்      தூரிகையும்  ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –     ஓவியம்

சித்தியும்     புத்தியும்    ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –          பக்தி

பரமனும்     பக்தனும்    ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –      முக்தி

கனவும்      கருத்தும்    ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –     காவியம்

குரலும்       பயிற்சியும்  ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –     கானம்

செயலும்     முயற்சியும்  ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –     வெற்றி

ஆறும்       ஐந்தும்      ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று –            ஆரஞ்சு

ஐந்தும்       ஆறும்      ஒன்றாகும்போது 
பிறப்பது ஒன்று –     பதினொன்று

image