அன்னையே தாயே

மாணிக்கப்   பதுமை     மரகதப்      பசுமை

மஞ்சள்     குங்குமம்    மங்கலப்     புன்னகை

நெளிந்த     குழல்கள்    ஜொலிக்கும் மூக்குத்தி

தழைந்த     ஆரம்       குலுங்கும்   கொலுசு

புஜங்களில்   வங்கி       கரங்களில்   வளையல்

இடையில்   மேகலை    ஜடையில்   வில்லை

நெற்றியில்  சுட்டி        விரலில்     மோதிரம்

காதில்      கம்மல்      கழுத்தில்    மாலை

தழைந்த     பட்டு        பாதத்தில்    மெட்டி

சேர்ந்த      உருவே     அழகுத்      திருவே

அன்னையே  தாயே       காத்திடு     எமையே !!