கடவுளின் சொந்த நாடு என்று கூறப்படும் கேரளத்தின் இயற்கை அழகு அந்த வார்தைகளை உண்மையாக்கிக் காட்டுகிறது.

கோட்டயம் அருகே இருக்கும் ஆறுகளும் குமரகத்தின் பின்னீர்ப் பகுதியில்  மிதக்கும் படகு வீடுகளும் , குட்டிக்கானோம் பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்டங்களும் பைன் மரப் பள்ளத்தாக்குகளும் வாகமனில் தெரியும் பச்சைப் பசேல் என்ற இயற்கைப் புல்வெளியும் நம் உடலுக்கு கிளர்ச்சியையும்  மனதுக்கு மயக்கத்தையும் தரும் என்பதில் சந்தேகமேயில்லை!