கும்பகோணம் என்றதும் நமக்கு நினைவுக்கு வருபவை:
டிகிரி காபி !டிகிரி காபி !டிகிரி காபி !டிகிரி காபி !
சரி, இந்த டிகிரி காபியை எப்படித் தயாரிப்பது?
தேவை:
சரியாக வறுத்து அரைத்த புது காபி பவுடர் ( சிக்கரி குறைந்த அளவு இருக்கவேண்டும்) – 3 ஸ்பூன்
பால் 1 .5 கப்
சர்க்கரை – தேவையான அளவு 1-2 ஸ்பூன்
தண்ணீர் 1/2 கப்
செய்முறை:
தண்ணீரைக் குமிழிகள் வரும்வரைக் கொதிக்க வைக்கவும். 3 டேபிள் ஸ்பூன் காபி பவுடரை பில்டரில் போட்டு இலேசாக அமுக்கவும். கொதிக்க வைத்த வெந்நீரை அதில் விட்டு உடனே மூடிவிடவும். 15 நிமிடத்தில் ஸ்ட்ராங்கான டிகாக்ஷன் தயார்.
1.5 கப் பாலைத் தண்ணீர் விடாமல் கொதிக்கவைக்கவும்.
¼ கப் டிகாஷனை பித்தளை டம்ப்ளரில் விடவும். ¾ கப் பாலையும் தேவையான சர்க்கரையையும் அதில் சேர்க்கவும்.
பித்தளை டவராவில் அதை ஆற்றி நுரைவரும்படிக் கலக்கவும்.
டிகிரி காபி தயார்.
குறிப்பு: டிகாஷனில் பாலைச் சேர்க்கவேண்டுமே தவிர பாலில் டிகாஷன் சேர்க்கக் கூடாது.
போட்ட காபியை மறுபடியும் சுடவைக்கக் கூடாது.
கேம்ப்ரிட்ஜ் என்று சொல்லப்படும் அரசாங்கக் கல்லூரி
( கல்லூரிக்குக் காவேரி ஆத்துப் பாலத்தைத் தாண்டி வருவதால் கேம்-ப்ரிட்ஜ் என்ற பெயர்)
கும்பகோணம் கொழுந்து வெத்தலை
மகாமகம்- பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தமிழகத்தின் கும்பமேளா ( அம்மாவும் தோழியும் குளித்தபோது ஏற்பட்ட நெரிசலில் மக்கள் இறந்தது ஞாபகம் வந்தால் நாம் பொறுப்பல்ல)
எண்ணற்ற கோவில்கள்:
நவக்கிரகக் கோவில்கள்
மற்றும்
ஊசி மோர்மிளகாய் ( குட்டி குட்டி மோர்மிளகாய் – வறுத்து சும்மாவே சாப்பிடலாம்)
கொசு
யானைக்கால்
பள்ளியில் பிடித்த நெருப்பில் 94 சின்னஞ் சிறு குழந்தைகள் மடிந்தது மனதை விட்டு நீங்கா சம்பவம்
பித்தளைப் பாத்திரங்கள், தாராசுரம்
சோழர்/ நாயக்கர் காலத்தில் தலை நகரம்
கும்பகோணத்திற்கு அருகில் முக்கியமான கோவில்கள்:
சுவாமிமலை – அறுபடை வீடுகளில் ஒன்று
திருநாகேஸ்வரம் கோவில்
ஒப்பிலியப்பன் கோவில்
பட்டீஸ்வரன் துர்க்கை அம்மன் கோவில்
கூத்தனூர் சரஸ்வதி கோவில்
தாரசுரம் கோவில்
திருவிடைமருதூர் கோவில்
பாபநாசம் 108 சிவாலயம்
திருக்கருகாவூர் கற்பகரக்ஷாம்பாள் கோவில்
நாச்சியார் கோவில்
மன்னார்குடி ராஜகோபாலன் கோவில்
திருக்கடையூர் அபிராமி கோவில்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்
பானபுரீஸ்வரர் கோவில்
பாண்டுரங்கன் கோவில் ,கோவிந்தபுரம்
பிரபலங்கள்:
கணிதமேதை ராமானுஜன்
ஸ்ரீனிவாச சாஸ்த்ரி
உ வே சாமிநாதய்யர்
ஜி கே மூப்பனார்
எம் எஸ் சுவாமிநாதன்
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
டைரக்டர் ஷங்கர்