சவுக்குச் சித்தன்!

image

பரட்டைத்தலை! கோவணத்தாண்டி! சித்தன்! கையில் சவுக்குடன்   குளத்துக் கிட்டே நின்று கொண்டிருந்தான். அவனைத்தாண்டிக்  குளத்தில்  முகம் கழுவ நாத்திகப்   புலவருக்குப் பயம்.

‘பயப்படாதே புலவா!என் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னா காசு தர்றேன்! இல்லேன்னா நீ எனக்கு அடிமையாகணும்!’

கை நிறைய காசைக் காட்டினான்.பஞ்சப் புலவருக்கு சபலம்.

“உனக்குத் தெரியாத பொருளைப் பற்றி  உன்னால் பாட முடியுமா?" 

‘முடியாது ‘என்றார் பகுத்தறிவுப் புலவர்.

‘அப்ப நீ என் அடிமை! இந்தா உனக்குத் தண்டனை! கையில் இருந்த சவுக்கால் புலவரை விளாசிவிட்டு , காசையும் சவுக்கையும்  அவர் முகத்தில் வீசி எறிந்துவிட்டுக் குளத்தில் குதித்து மறைந்து போனான் சித்தன்!

புலவருக்கு வலிக்கவில்லை!

அவர் தன் உடைகளைக் களைந்து கோவணம் கட்டிக் கொண்டார். சவுக்கால் தன்னை அடித்துக் கொண்டே ஆயுள் முழுவதும் பாடல்கள் பாடினார் சிவனைப் பற்றி!

சவுக்குச் சித்தர் பாடல்கள்!