டேய்! ரொம்பப் பேசினீங்கன்னா என் சொத்தையெல்லாம் அனாதை ஆஸ்ரமத்திற்கு எழுதி வைத்துவிடுவேன்!
இதுக்குமேல பேசினா உங்களையே அனாதை ஆஸ்ரமத்துக்கு அனுப்பிச்சுடுவோம்!
நம்ம அரசியல்வாதிகளெல்லாம் விமர்சகர் பற்றிக் கவலைப்படுவதேயில்லை!
ஏன்?
எந்த விளக்குக் கம்பமாவது நாயைப் பற்றிக் கவலைப்படுமா என்ன?
அந்த பேஷண்டுக்கு ஆபரேஷன் செய்ய ஏன் எல்லா டாக்டரும் துடிக்கிறார்கள்?
அவர் கிட்னியிலே வைரக்கல் இருக்காம்!
நம்ம ராமசாமி சரியான கஞ்சன்டா ?
எப்படி சொல்லுறே?
அவன் பேண்ட் பாக்கெட்டிலேர்ந்து காசை எடுப்பது வாஷிங் மெஷின்லே போடும்போது மட்டும் தானாம்!
மச்சி! சீசன்லே ஆக்ரா வர்ரோம்! தங்க வசதியெல்லாம் இருக்குமில்லே?
கவலைப்படாதே மாமு! தாஜ்மகாலிலேயே தங்க வைச்சுடறேன்!
அடப்பாவி! ஷாஜகான் கிட்டே படுக்க வைச்சுடாதே!
சரி! மும்தாஜ் ஒகேயா?
என்னா மச்சி! கையிலே ரோசாப்பூமாலை?
யாருக்குப் போடலாம்னு தான் யோசிக்கிறேன்!
என்னை விட பெரிய மனுஷன் எவன் இருக்கான்? சும்மா போடு!
நீ படு! நான் போடறேன்!