தயாரிக்கும் விதம்:
சுத்தமான நீரைக் கொதிக்க வைத்து சில நிமிடம் குளிர வைக்கவும்.
ஒரு கப்புக்கு ஒரு கிராம் அளவில் கிரீன் டீயை சேர்த்து ஒரு நிமிடம் தரமான சுவைக்கும் மூன்று நிமிட நேரம் கடும் சுவைக்கும் வைக்கலாம்.
எலுமிச்சம்பழச் சாறு / தேன் சேர்த்துக் குடிக்கலாம்.
கசப்பு பிடிக்காதவர்கள் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
எதுவும் சேர்க்காமல் கிரீன் டீயை சும்மா குடிப்பது ரொம்ப நல்லது.
பலன்கள்:
1. கிரீன் டீயில் உள்ள ஆண்டியாக்சிடண்ட் புற்று நோய் வராமல் பாதுகாக்கிறது.
2. இதய நோய்களைத் தடுக்கிறது.
3. இதில் உள்ள பாலிபினால் வாழ்நாளை நீட்டிக்க உதவுகிறது.
4. இது உடலில் உள்ள கொழுப்பை அகற்றி உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.
5. தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
6. இதில் உள்ள என்ஸைம்கள் எலும்புகள் தேயாமல் பாதுகாக்கிறது.
7. நல்ல கொலஸ்டிராலை அதிகரித்து தீய கொலஸ்டிராலைக் குறைக்கிறது.
8. இது ரத்தத்தில் சர்க்கரை அதிகமாவதைத் தடுத்து சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.
9. ஆசிடைல் கோலின் என்ற தாதுப் பொருளின் வேகத்தைக் குறைத்து அல்ஸிமெர்ஸ்/பார்க்கின்சன் நோய்கள் வராமல் காப்பாற்றுகிறது.
10. உயர்ந்த ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்துகிறது.
11. உணவில் உள்ள நச்சுப் பொருட்களின் தாக்கத்தைக் குறை க்கிறது.
12. நோய் எதிப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
13. இதில் உள்ள வைட்டமின் சி குளிர்காய்ச்சலைக் கட்டுப்படுத்துகிறது.
14. இதில் உள்ள தியோபைல்லின் ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்துகிறது.
15. இதில் உள்ள எல்-தியானின் மற்றும் அமினோ அமிலங்களும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது,
16. வாய் நாற்றத்தைப் போக்கவும் இது பயன்படுகிறது.
17. மேலும் அலர்ஜியைக் கூடக் கட்டுப்படுத்துகிறது.
18. காதுகளைச் சுத்தம் செய்ய கிரீன் டீயில் நனைத்த பஞ்சைப் பயன்படுத்தலாம்.
19. தோலில் ஏற்படும் படர் தாமரையைக் கூட கிரீன் டீயில் நீர் சேர்த்துப் பயன் படுத்தலாம்.
மொத்தத்தில் இது ஒரு சகலரோக நிவாரணி என்றால் சந்தேகமில்லை!
நன்றி: ஆர்கானிக் கிரீன் டீ தயாரிக்கும் போப்ஸ் எண்டர்ப்ரைசஸ் அவர்களின் குறு வெளியீடு!