பாபாவின் திருவடி

 

image

விழாமல்          காக்கும்           பாபாவின்   முத்திரை   !
விழுந்தாலும்      தூக்கும்           பாபாவின்   தளிர் விரல் !
மலைத் துயரை    மண்ணாக்கும்      பாபாவின்   திரு  முகம் !   அலைத் துயரை    பின்னோக்கும்      பாபாவின்   திருக் கரம்  !
மனக் கசப்பை    இனிப்பாக்கும்      பாபாவின்   திரு விழிகள்!
உடல் உழைப்பைப்  பொன்னாக்கும்  பாபாவின்   பொன் மேனி!
காமத்தை         ஒழித்து விடும்     பாபாவின்   பார்வை ஒளி!
கோபத்தை         அழித்து விடும்     பாபாவின்   ஸ்வாஸம்  !
இதயத்தை         உருக வைக்கும்    பாபாவின்   ஸ்பரிசம்    !
இன்பத்தை        அள்ளித் தரும்     பாபாவின்   திரு மொழிகள் !
தன்னையே        தந்து விடும்       பாபாவின்   திருவடிகள்  !