பெருமாளே ! பெருமாளே !
ஸ்ரீ ரங்க நாதப் பெருமாளே !
நாடி வருகின்ற கோடி மக்களின்
குறை தீர்க்கும் பெருமாளே – எங்கள்
குறை தீர்க்கும் பெருமாளே !
பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாளே !
பாதங்களைப் பணிகின்றோம் இந்நாளே !
அறிவும் இல்லாத பொருளும் இல்லாத
பாமரரைக் காத்திடணும் – இந்தப்
பாமரரைக் காத்திடணும்
அலையலையாய் மக்கள் கூட்டம் வந்திடணும்
கோவிந்தன் உன் நாமம் பாடிடணும்
ரத்ன சேவை கண்டிடணும் முத்து சேவை கண்டிடணும்
ஏகாதசி திருநாளிலே – வைகுந்த
ஏகாதசி நன்னாளிலே !
பாரெல்லாம் உன் நாமம் பாட வேண்டும்
தெருவெல்லாம் பக்தி வெள்ளம் ஓட வேண்டும்
தேடி உன்னை நாடணும் நாடி உன்னைப் பாடணும்
நாராயணன் நாமம் எந்நாளுமே – ஸ்ரீமந்
நாராயணன் நாமம் எந்நாளுமே !!