மருந்தீஸ்வரர்

image

உடல்       வாதை      நீக்கிடும்     ஈஸ்வரர்         மருந்தீஸ்வரர் !
மனச்       சோர்வை    மாற்றிடும்   ஈஸ்வரர்     மருந்தீஸ்வரர் !
பிறவித்     துயரைப்     போக்கிடும்   ஈஸ்வரர்    மருந்தீஸ்வரர் !
பிறவிப்     பயனைத்    தந்திடும்     ஈஸ்வரர்     மருந்தீஸ்வரர் !
வாய்க்கு     உணவை    ஈந்திடும்     ஈஸ்வரர்   மருந்தீஸ்வரர் !
செவியில்   தேன்தமிழ்   ஓதிடும்     ஈஸ்வரர்   மருந்தீஸ்வரர் !
கண்ணில்    கனிவை  பெய்திடும்   ஈஸ்வரர்    மருந்தீஸ்வரர் !
நாசியில்   சிவமணம் சேர்த்திடும்  ஈஸ்வரர்    மருந்தீஸ்வரர் !
மனதில் மகிழ்வை   முகிழ்த்திடும் ஈஸ்வரர்   மருந்தீஸ்வரர் !
நெஞ்சில்    ஈரம்           கசிந்திடும்   ஈஸ்வரர்    மருந்தீஸ்வரர் !
மெய்யைமெய்யால் வேய்ந்திடும் ஈஸ்வரர்    மருந்தீஸ்வரர் !!