வர்ணனை
மாங்காட்டுத் தாயே !
மண்ணில் விளைந்த மணியோ தாயே உன் திருமுகம்
மானில் பொதிந்த விழியோ தாயே உன் இமைகள்
மின்னல் மின்னும் பொன்னோ தாயே உன் கன்னம்
மீன்கள் துள்ளும் அழகோ தாயே உன் கண்கள்
முன்னம் கொய்த மலரோ தாயே உன் இதழ்கள்
மூங்கில் வளைந்த எழிலோ தாயே உன் தோள்கள்
மென்மை கொஞ்சும் தளிரோ தாயே உன் விரல்கள்
மேயும் பசுவின் மடியோ தாயே உன் தாய்மை
மையல் கொண்ட மயிலோ தாயே உன் கழுத்து
மொய்க்கும் மலர்க் கொடியோ தாயே உன் கொடியிடை
மோனம் பதிந்த நிலையோ தாயே உன் வடிவுடை
மௌனம் கொண்ட கடலோ தாயே உன் திருவுடை
இம்மையில் செய்த பலனே தாயே உன் திருவடி