முத்தமிழ் முதல் முக்கனி வரை
மூவேந்தர் முதல் மூவுலகம் வரை
மூணாம் பேஸ்து முதல் மூணு சீட்டு வரை
மூணாறு தமிழில் நிறை ஓடியிருக்கிறது
மூன்றின் அழகே தனி !
மூன்றின் சுவையே தனி !
மூன்றின் பெருமை தனி !
மூன்றின் சிறப்பு தனித்தனி !
கணவன் மனைவி இடையில் குழந்தை – மூன்றின் சிறப்பு
காதலன் காதலி இடையில் தோழி – மூன்றின் சிறப்பு
மொத்தம் சில்லறை இடையே தரகர் – மூன்றின் சிறப்பு
வாதி பிரதிவாதி இடையே நடுவர் – மூன்றின் சிறப்பு
சொர்க்கம் நரகம் நடுவில் உலகம் – மூன்றின் சிறப்பு
உண்மை பொய் நடுவில் மௌனம் – மூன்றின் சிறப்பு
மேலே கீழே நடுவில் திரிசங்கு – மூன்றின் சிறப்பு
இளமை முதுமை நடுவில் வாலிபம் – மூன்றின் சிறப்பு
வெற்றி தோல்வி நடுவில் சமம் – மூன்றின் சிறப்பு
ஆசை கோபம் நடுவில் ஊடல் – மூன்றின் சிறப்பு
ஆண் பெண் நடுவில் அரவாணி – மூன்றின் சிறப்பு
கோடை வாடை இடையில் வசந்தம் – மூன்றின் சிறப்பு
வாமனன் கேட்டது மூன்றடி மண் !
மதனை எரித்தது மூன்றாவது கண் !
திருமணம் துவங்க மூன்று முடிச்சு !
திருமணம் முறிய மூன்று தலாக் !