ஆடி ஸ்பெஷல்

image

image

image

image

image

ஆடி என்றாலேயே நமக்கு நினைவுக்கு வருவது 
அம்மன் கோவில் திருவிழாக்கள், கூழ் காய்ச்சுவது, தீ மிதிப்பது,
அம்பாளுக்கு வளைகாப்பு – வளையல் விநியோகம் 
வரலக்ஷ்மி பூஜை 
பூணூல் மாற்றுவது 
ஆடிக்காற்று
ஆடி பதினெட்டு – பதினெட்டாம் பேறு -சித்ரான்னம் –  
ஆடி சீர் வரிசை -ஆடிக்கு அழைத்தல்
புது மாப்பிள்ளையையும் பெண்ணையும் பிரித்து வைப்பது
(பங்குனி சித்திரை குழந்தை பிறப்பை ஒத்திவைக்க)
ஆடி அமாவாசை – முன்னோருக்கு உகந்த நாள் 
ஆடி கிருத்திகை,- முருகனுக்கு உகந்த நாள் 
ஆடிப்பூரம் – ஆண்டாள்  பிறந்த நாள் 
ஆடி வெள்ளி -ஆடி செவ்வாய் – அம்மனுக்கு உகந்த நாள் 
ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் பருவம்.
தக்ஷிணாயனம் துவங்கும் காலம்.
மழை பொழியும் நேரம்.
விவசாயத்திற்கு முக்கியம் கொடுக்கவேண்டிய தருணம்!
இதெல்லாம் கிடக்கட்டும்! இப்போது ஆடி என்றாலே
ஆடிக் கழிவு – ஆடித்  தள்ளுபடி போத்தீஸ், சென்னை சில்க்ஸ் போன்றவை தான் ஞாபகத்திற்கு வருகிறது! கஷ்ட காலம்!