ஆனந்த விகடன் 52 மார்க் கொடுத்து கவுரவித்திருக்கும் படம் சதுரங்க வேட்டை.

மிரட்டும் வசனம். எதார்த்த நடிப்பு. கச்சிதமான திரைக்கதை. எழுதி இயக்கிய வினோத்தையும் தயாரித்த லிங்குசாமியையும் எததனை முறை பாராட்டினாலும் போதாது. 

மனசில குற்ற உணர்வே இல்லாமே மற்றவரை ஏமாத்தறது தப்பே இல்லை!

பொய்யைச் சொல்லும் போது கொஞ்சம் உண்மையையும் கலந்து சொல்லணும்.

வெள்ளைச் சட்டையைப் போட்டாலே மத்தவனை ஏமாத்தணும்னு தோணுதில்லே !

பணம் சம்பாதிக்க ஈசியான வழி ஆயிரம் இருக்கு

மண்புழு விற்பனை , மல்டி லெவல் மார்க்கெட்டிங், ஈமு கோழி, ரைஸ் புல்லிங்க் கலசம், நிதி நிறுவனம், போன்ற உண்மைச் சம்பவங்களை இணைத்து கொஞ்சம் சென்டிமெண்டும் கலந்து கொடுத்த  காக்டைல் கிக் இது!

இந்தப் படத்தின்

ஹீரோ வசனம் தான்! அவ்வளவு  ஷார்ப்பாக  இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஒரு புதிய மைல் கல்! 

—————————————————————-

மலையாள  சூப்பர் டூப்பர் ஹிட்டான திருஷ்யம்  படத்தின் தமிழாக்கத்தில்  கமலும் கௌதமியும் நடிக்கிறார்கள் என்பது பழைய நியூஸ்!

அதன் பெயர்  ‘பாபநாசம்’ என்று சொல்லப்படுகிறது.

நன்றி: சினிமா விகடன்