கொஞ்சிடு தாயே

 

image

தேவீ !
தேவ        தேவதை    நீ     தானே !     மலர்
தூவும்      பக்தனும்    நான்  தானே !

கண்களைத்  திறந்ததும்   பெய்திடும்   பொன்மழை
புன்னகைக்   கீற்றினில்    பொங்கிடும்  தேன் இதழ்
உருவே !    தினமும்     உருகும்     திருவே !
கனவே !    கணமும்    மறவேன்    உனையே !
பக்தனுக்கு   ஒரு        வரம்        தந்திடுவாய் ! உன்னை
பக்தியால்    பாடிட       வரந்தருவாய் !

கவிதாபிஷேகம்    செய்திட     வந்தேன்
கற்பனை    மலர்களை   வார்த்தையில்      தொடுத்தேன்
தேவியின்   இளநலம்    தேடினேன்   கவிநயம்
தூவினேன்   கண்மலர்    தாளடி      பணிந்தேன்
அஞ்சுதல்    அகண்டு     நெஞ்சமே   துள்ளும்
கெஞ்சியே   வந்தேன்    கொஞ்சிடு   தாயே !