குட்டீஸ் லூட்டிஸ்

                                     image

                                                                       (சிவமால் )

கம்ப்யூட்டரில்  வேலை முடிந்த பின் ஷட்டௌன் பண்ணினேன். கம்ப்யூட்டர் திரையையே பார்த்துக் கொண்டிருந்த என் பேத்தி ‘தாத்தா இந்தக் கம்ப்யூட்டருக்கு இங்கிலீஷே தெரியல . விண்டோஸ் என்கிறது ப்ளூரல் தானே.. விண்டோஸ் ஆர் ஷட்டிங் டவுன் தானே வரணும். விண்டோஸ் ஈஸ்  ஷட்டிங் டவுன்னு வறது பார்.  " என்றாள். ஒரு நிமிஷம் அவளையே பார்ததுக்கொண்டிருந்த நான் அவளை அப்படியே  அணைத்துக் கொண்டேன்!

                                   குழந்தை  யேசு 

image

 ஏம்மா.. ஏசுவை சிலுவையில அறைஞ்சாங்க? யு‌கே‌ஜி  படிக்கும் லக்ஷ்மி  கேட்டதும் சரோஜாவுக்குக்  கோபமா வந்தது. இதுக்குத் தான் இந்த கான்வெண்ட்டே கூடாது. என்கிறது. சின்னக் குழந்தைக்கு கொஞ்ச கொஞ்சமா மத போதனை செய்யறாங்க!  இப்படியே விட்டா மதத்தையே மாத்திடுவாங்க! சரோஜா பொறுமினாள் . இந்த ஆனந்தன் எதை சொன்னாலும் காதிலே போட்டுகிறதே இல்லை. காலையிலிருந்து ராத்திரி வரை மாடு மாதிரி உழைப்பான். பாத்திர வியாபாரம் துணி வியாபாரம் எல்லாம் சைக்கிளில் தான். சரோஜாவுக்கு அவன் சம்பாதிப்பது போதலையே என்ற குறை எப்போதும் உண்டு. ‘ஏசுவும் நம்ம அப்பா மாதிரி தானேம்மா? நமக்காகக் கஷ்டப் பட்டாராமே! அப்போ அப்பா தான் ஏசுவா? பொறிதட்டியது சரோஜாவுக்கு.  

                                      பள்ளிக்கூடம்

image

மாபெரும் அமெரிக்கன் பள்ளி! அஸ்திவாரத்திலிருந்து உருவாகிக் கொண்டிருந்தது. பத்து மாதமாகக் கட்டப்படும் கட்டடம். நூற்றுக்கணக்கான தொழிளாளர்கள் அங்கேயே குழந்தை குட்டிகளுடன் தங்கி கட்டிடத்தை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

 எட்டு வயசு வேலு அங்கே செங்கல் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான். ‘மச்சான் !நம்ம வேலுவை  இந்த வருஷம் ஸ்கூலிலே கட்டாயம் போடணும் ! ’ ராமாத்தா கெஞ்சினாள். கவலைப் படாதே ராமாத்தா! அதிர்ஷ்டம் இருந்தா வேலுவுக்கு இந்த ஸ்கூலிலேயே இடம் கிடைக்கும்! ’ நடக்கற  காரியமா பேசு மச்சான்! ராமாத்தா அலுத்துக் கொண்டாள். 

கடைசியில் அவன் சொன்ன படி வேலுவுக்கு அந்த ஸ்கூலில் இடம் கிடைக்கத் தான் செய்தது. .

எப்படி?

1. பாசிடிவ் முடிவு

பள்ளி திறப்பு விழாவின் போது அங்கு வைத்திருந்த வெடிகுண்டைக் கண்டுபிடித்து  அப்புறப்  படுத்தியதற்காக பள்ளி நிர்வாகம் வேலுவைத் தத்தெடுத்து  அங்கேயே படிக்க இடமும் கொடுத்தது.

2. நெகட்டிவ் முடிவு

பள்ளி திறப்பு விழாவின் போது அங்கு வைத்திருந்த வெடிகுண்டைக் கண்டுபிடித்து  அப்புறப்  படுத்திய போது நடந்த விபத்தில் வேலு சிதறிப் போகிறான்.. அவனது படத்திற்குப் பள்ளி மெயின் ஹாலில்  இடம் கிடைத்தது. 

Advertisements