சென்னையில் பார்த்து ரசிக்க வேண்டிய இடம் தக்ஷின் சித்ரா. சென்னை கிராஃப்ட் பவுண்டேஷன் ஆரம்பித்த கலாசாரங்களைப் பாதுகாக்கும் கூடம் இது. தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,ஆந்திரா ஆகிய நான்கு மாகாணங்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. 

பத்து ஏக்கரில்  E C R ரோட்டில் முட்டுக்காட்டிற்கு அருகில் இருக்கும் அருமையான இடம் தக்ஷின்  சித்ரா. நுழைவுக் கட்டணம் 120 ரூபாய். 

குழந்தைகளைக் கவர நிறைய வைத்திருக்கிறார்கள். நாட்டுப்புற நடனங்கள் மேஜிக் காட்சி, மற்றும்  அம்ஃபி தியேட்டரும் உண்டு. கேண்டீன் ,ரெஸ்டாரெண்ட்டும் உண்டு. 

தமிழ்நாட்டில் செட்டியார் வீடு, விவசாயி வீடு, குயவர் வீடு, கூடை முடைபவர் வீடு, நெசவாளர் வீடு ,திருநெல்வேலி அய்யர் வீடு  என்று முழு வீட்டையே நிறுத்தி அசத்தி யிருக்கிறார்கள்.. வீட்டுக்குள்ளேயே நாம் போய்ப் பார்த்தால் அந்தக் கால கிராம நினைவு வரும். 

அதேபோல் ஆந்திரா கர்நாடகா கேரளா மக்களின் கலாசாரத்தை நினைவு கூறும் வீடுகளும் உண்டு. 

இவற்றைத் தவிர கூடை முடைதல், மண்பானை செய்தல், ஓலைப் பொம்மைகள் செய்தல், கண்ணாடி ஊதல்,  ஆகியவற்றைக் கற்றும் தருகிறார்கள். கிளி ஜோசியம், கை ஜோசியமும் உண்டு. 

மீடியம் அளவு ஹால்களும் உண்டு, அவற்றில் பெரும்பாலும் ஹவுஸ் கச்சேரி, மெகந்தி விழா, குடும்பக் கொண்டாட்டம் ஆகியவை அடிக்கடி நடைபெறும். அதற்குத்  தனியாக பதிவு செய்யவேண்டும்.

இரவில் தங்குவதற்கு AC அறைகளும் உண்டு. 

காதல் ஜோடிகள் நிறைய திரிகின்றன.

கம்ப்யூட்டரையே  கட்டிக் கொண்டு அழும் IT பெருமக்களும் குழந்தைகளும் போய் தங்களை மறந்து காலச்சக்கரத்தில் ஒரு 70/80 ஆண்டுகள் பின்னோக்கிப் போங்களேன் 

சுகானுபாவமாக இருக்கும்.