நான்கு

 

image

நான்கு என்றதும்    நினைவுக்கு  வரும்       நால்வர்
நம்மைக்    கடைசியில்  தூக்கும்     அந்த        நால்வர்

நான்கு என்றதும்    வணங்கத்   தோன்றும்   நால்வர்
நமக்கு      தேவாரம்    தந்த  சமயக் குரவர்     நால்வர்
அப்பர்       சுந்தரர்      சம்மந்தர்    மாணிக்க    வாசகர் !

நான்கு என்றதும்    வழிகள்     காட்டிடும்    திசைகள்
கிழக்கு      மேற்கு      வடக்கு      தெற்கு

நான்கு என்றதும்    தெரியும்     பருவம்     நான்கு
வசந்தம்     கோடை     இலையுதிர்  வாடை

நான்கு என்றதும்    சர்ச்சைக்குரிய     வகுப்பு      நான்கு
பிராமணன்  சத்திரியன்   வைசியன்         சூத்திரன்
நான்கும்     அன்றைய   நாற்கரத்தில் நான்கு பக்கம்
உயர்ந்தவன் தாழ்ந்தவர்   நான்கில்     என்றும்     கிடையாது
சீட்டுக்      கட்டைப்போல அதுவும்   நான்கு ஜாதி
உயர்ந்தது   தாழ்ந்தது    சீட்டுக்      கட்டிலும்    கிடையாது

நாம்        போற்றித்    துதிக்கும்    பேர்களும்   நால்வர்
மாதா       பிதா        குரு        தெய்வம்

நாம்        போற்றிப்    படிக்கும்     வேதங்கள்   நான்கு
ரிக்         யஜுர்      சாமம்       அதர்வணம் 

மனிதரைக்   கட்டிப்       போடும்     விலங்குகள்  நான்கு
பெற்றோர்   சுற்றார்      துணை      மக்கள்

மனிதரை    உயர்த்திக்   காட்டும்     மையங்கள்  நான்கு
தனம்       குணம்      கல்வி       உழைப்பு ! !