மந்திரம் – தந்திரம்

image

பெ:   கறுப்புப்     பூனையே    உன்  கண்ணில்    என்ன மந்திரம்

            ராத்திரியிலும்      உனக்குக்    கண்  தெரியுதே

ஆ:   குட்டி       நாய்க்குட்டி  உன்  மூக்கில்     என்ன தந்திரம்

            தூரத்திலே ஆள்    வந்தாலும்   மோப்பம்    தெரியுதே

பெ:   சீறும்       புலிக்குட்டி   உன்  நகத்தில்     என்ன மந்திரம்

            கீறிக் கீறி    தினமும்     என்னை     இம்சை செய்யறே

ஆ:   வெள்ளை   முயல் குட்டி உன் நெஞ்சில்    என்ன தந்திரம்

            பந்து போல   பாய்ந்து    என்னை     மயங்க வைக்கிறே       

பெ:   செல்லக்     காளையே   உன்  கொம்பில்   என்ன       மந்திரம்

            குத்திக் குத்தி என்னை நீயும்     துவம்சம்    செய்யறே

ஆ:   குள்ள      நரிக்குட்டி   உன்  முகத்தில்    என்ன       தந்திரம்

            முழிச்சுப் பாத்து    என்னை நீயும்     உசுப்பி      விடுகிறே

பெ:   நெட்ட      மலைப்பாம்பே உன் உடம்பில்   என்ன       மந்திரம்

       முறுக்கிப் போட்டு  என்னை நீயும்  முழுங்கப் பார்க்கிறே                          

ஆ:   ஆட்டுக்     குட்டியே    உன்  காலில்      என்ன       தந்திரம்

            குதித்துக்  குதித்து  என்   மனசைக்    கூளம்       ஆக்குறே

 image

பெ:   கள்ளக்      குரங்கே     உன்  வாலில்     என்ன       மந்திரம்    

            வளைச்சுப் போட்டு என்னை நீயும்     மலைக்க    வைக்கிறே

ஆ:   கண்ணுக்    குட்டியே    உன்  இதழில்     என்ன       தந்திரம்

            கவ்விப் பிடித்து    என்னை நீயும்     ஜவ்வு       ஆக்குறே

பெ:   கரடிக்       குட்டியே    உன்  மேனி       எங்கும்      மந்திரம்

            ரோம ராஜ்ஜியத்தில்      என்னை     அடிமை     ஆக்குறே

ஆ:   காட்டுப்     பன்றியே    உன்  மூச்சில்     என்ன       தந்திரம்

            முகர்ந்து முகர்ந்து  என்னை நீயும்     மலரச்      செய்யிறே

பெ:   ஆசைச்     சிங்கமே     உன்  அங்கம்      என்ன       மந்திரம்

            தஞ்சமென்று       விழுந்த போதும்   கடிச்சுத்     தின்னுறே

ஆ:   அழகு       மயில் குட்டி உன்  தோகை     என்ன       தந்திரம்

            விரித்து விரித்து   என்னை நீயும்     சொக்க      வைக்கிறே

பெ:   துள்ளும்     சுண்டெலி   உன்  வேகம்      என்ன       மந்திரம்

            துள்ளித் துள்ளி    ஓடிக்  களைத்து    வளையில்   பதுங்குறே

ஆ:   கள்ள       மான் குட்டி  உன்  மேனி       எங்கும்      தந்திரம்

            தடவத் தடவ      நெதமும் நீயும்    சிலிர்த்துப்   போகிறே

பெ:   கொல்லும்   புலிக்குட்டி   உன்  பார்வை     என்ன       மந்திரம்

            பாத்த உடன்       என்   உடம்பை    வேர்க்க     வைக்கிறே !!

                              *************************                   

 image