ஷேக்ஸ்பியரின் மாக்பெத் -விமர்சனம் by கிருபானந்தன்

ஷேக்ஸ்பியர் காமெடி,ட்ராஜிடி நாடகங்கள் பற்றிக் கேள்விப்பட்டது தவிரப் படித்தது கிடையாது.

ஷேக்ஸ்பியரின் படைப்பான ‘மாக்பெத்’ நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது

‘வியட்நாம் வீடு’ சுந்தரம் அவர்கள் தனது அறுபது ஆண்டு பேனா அனுபவத்தைக் கொண்டாடும் வகையில் “MACTRICS” குழுவினருடன் இணைந்து . 5.08.14 மற்றும் 06.08.14 இரு தினங்களிலும்   ‘மைம்’ (மௌன மொழி) வடிவத்தில்  மயிலாப்பூரில் அரங்கேற்றிய நாடகம் அது.

image

ஷேக்ஸ்பியரும் அவரது மனைவியும் தவிர மற்ற கதாபாத்திரங்கள் பேசுவது இல்லை. ஒரு மணிநேரத்திற்குக் குறைவான இந்த நாடகத்தில் மிகவும் பாராட்ட வேண்டிய விஷயங்கள்.

  • சுமார் 30 இளைய நடிகர்களின் ஆர்வம்  மற்றும்  "ENERGY LEVEL"
  • மௌன நாடகத்திற்குத் தேவையான சரியான அளவில் மிகை நடிப்பு
  • அற்புதமான ஒருங்கிணைப்புடன் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகள்.
  • ஷேக்ஸ்பியரையே சூத்ரதாரியாக உபயோகிக்கும் டெக்னிக்
  • சோகமாக ஆரம்பித்து மகிழ்ச்சியாக உருமாறும் நடனம்.

எதுவுமே குறைசொல்லமுடியாத இந்த நாடகத்தைக் கதை முன்பே தெரிந்திருந்தால் இன்னமும் ரசித்திருப்பேனோ என்று தோன்றுகிறது