சுந்தர ராமசாமியின் சிறுகதை

தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களில் சுந்தர ராமசாமியும் (1931-2005)  ஒருவர். மூன்று நாவல்களும் 60 சிறுகதைகளும் எழுதியவர். கனடாவில் இலக்கிய சாதனைக்காக ‘இயல்’ விருதைப் பெற்றவர். காலச்சுவடு என்ற இதழை நிறுவியவர்.  இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவரின் ஒரு கதையை அறிமுகப்படுத்துகிறேன்!

                     கோவில் காளையும் உழவு மாடும்

image

ஒரு கோவில்  பண்டாரம். அன்னக் காவடி எடுத்துக் கொண்டு மக்களிடம் காசு பொருள் வாங்கி ஒரு இடிந்த மாடன் கோவில் அருகே தங்கி  சமைத்துச் சாப்பிடும் யதார்த்த மனிதன். தரையில் கால் வைத்தால் நெருஞ்சி முள் அப்பிவிடும் கோவில் தான் பண்டாரத்தின் புகலிடம்.அவனுக்குத் துணை ஒரு கிழ நாய்.   கோவில் சன்னிதானத்திற்கு அருகில் இருக்கும் ஒரு மரப்பெட்டி  தான் அவனது சொத்து சம்பத்து. 

image

ஒரு நாள் ராத்திரி அந்தக் கோவிலில் தலை சாய்க்கப் .போக்கிடமில்லாத ஒரு கிழவர் வருகிறார். கருவாடு மாதிரி உடம்பு. லாபத் தேவதைக்கு சத்தைக் காணிக்கை கொடுத்து மிஞ்சிய சக்கை.காது கொஞ்சம் மந்தம் தான். அந்தக் ‘களை ’ முகத்தில் தெரிந்தது. பண்டாரம் பரிதாபப்பட்டு நாய்க்கு வைத்திருந்த  சோற்றை அவருக்குப் போடுகிறான் .

நாய்க்கு ஏமாற்றம் தான்.

காலையில் எழுந்ததும் பண்டாரம் காவடியை எடுத்துக் கொண்டு போய்விட்டான். கிழவர் தூங்கிக் கொண்டிருந்தார். மாலையில் பண்டாரம் வந்தபோது கோவிலைச் சுற்றி புல் பூண்டு  இல்லை. துப்புரவாக இருந்தது. கிழவனாரின் கைவண்ணம் தான் என்று தெரிந்தது. 

கிழவனுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக்! ஒரு பையன்  பன மரத்திலிருந்து கீழே விழுந்து செத்துப் போனான். வீட்டை விட்டு ஓடிப் போன இரண்டாம் பையன் அம்மாக்காரி செத்ததும் காதிலிருந்த பாம்படத்தைக்  காதை வெட்டியாவது எடுக்கணும்னு வந்தான். “லேய்! அவ காதெத் தொட்டியோ என் அய்யாவாணே, துண்டு  துண்டாக்  கொத்திப் போட்டிடுவேன்” என்று கிழவர் கத்தினதும் ஓடிப் போனவன் தான்.. 

கிழவர் பண்டாரத்து கூடவே தங்கிவிட்டார். கிழவர் தனக்குத் தானே ஒரு வேலையைத் தேடிக்கிட்டார். பக்கத்து கிராமத்தில மக்கள் எல்லாம் தண்ணியில்லாம கஷ்டப் படுவதைப் பார்த்து ஒரு கிணறு தோண்ட முடிவு செய்கிறார். 

‘ஒன்னாலே கிணறு தோண்டக்  களியுமா? அட பயித்தியாராக் கிளவா!’ என்று பண்டாரம் சொல்லியும் கிழவர் கேட்கவில்லை. தினமும் போய் கிணறு வெட்டிக்கிட்டே இருந்தார். அந்த ஊர் மக்கள் கூட கிண்டல் செய்வார்கள். . 

“ஒனக்கு வயசு காலத்திலே சிவனேன்னு இருக்கப்படாதா?”

“நான் நாப்பது வருஷம் சளைக்காம வேலை செஞ்சவன்.  ஒரு நா குந்தியிருந்து தின்னவனில்லை.எனக்கு அது பழக்கமில்லை”

ஒரு நாள் கிழவர்  துணி மூட்டையில் மண்ணை எடுத்து வருகிறார். 

‘ஈரமா இருக்கில்லே ! ஊத்து கண்டுடுத்து.’

பண்டாரம் கிழவர் தோண்டிய கிணத்தைப் பார்த்து ஸ்தம்பித்துப் போகிறான்.

அட பாவி மனுசா! இந்த தள்ளாத வயதிலே ராட்சஷ வேலையில்ல  செய்திருக்கே! மனுஷ காரியமா அம்மாடி?

image

இன்னா பாரு என்று கிழவர் ஒரு கல்லைத் தூக்கி கிணத்தில் போடுகிறார். ’ களுக்’  சத்தம்.  நிறைய தண்ணி கிடக்கு!

அடுத்த நாள் கிழவனுக்குக் காய்ச்சல்! பண்டாரம் பரிதவித்தான். மருந்து எதுவும் வேண்டாம் அந்தக் கிணத்திலிருந்து ஒரு குடம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். தானும்  குடித்துவிட்டு பண்டாரத்துக்கும் கொடுத்தார். அமிர்தமா இருந்தது பண்டாரத்துக்கும்.. 

ஒரு கல்யாண கோஷ்டி வந்து அந்தக் கிணத்தையும் அதன் தண்ணீரின் சுவையையும் பற்றி ரொம்ப ஆச்சரியப் பட்டுப் போனார்களாம். ஒரு கிளவன் தன்னந்தனியா தோண்டிபூட்டான்னு ஆச்சரியம். வேற. தங்கள் செலவிலே கல்லும் சுவரும் கட்டி கயிறும் பாட்டையும் போட்டு தர்ரேன்னு சொன்னாராம். 

அதை சந்தோஷமாக் கேட்டுட்டு கிழவன் ஒரேயடியா கண்ணை மூடினார் . 

மறுநாள் இரவு பண்டாரம் வழக்கம் போல் சோறு பொங்கிக் கொண்டிருந்தான் . ஆனால் அவனால் சாப்பிட முடியவில்லை ஏதோ ஒரு மகத்தான சம்பத்தை இழந்தது போன்ற நினைவுகள் மனத்தைப் பிழிந்தெடுத்தன. திடீரென்று அவனுக்கு உணர்ச்சி பொங்கிற்று. கல்தூணில்  தலையை சாய்த்துக் கொண்டு அழுதான். 

நாய்க்கு மட்டும்  அன்று ஏமாற்றமில்லை. 

————————————————————–

ஷேக்ஸ்பியரின் வரிகள் கண்களில் தெரிகிறது!

If you have tears shed them now!

சென்னை கிறிஸ்தவ கல்லூரி 

இன்னும் பசுமை நிறைந்த கல்லூரி வளாகம் !

செடிகளும்,கொடிகளும்,மரங்களும்,பழைய ஆனால் உறுதியான கட்டிடங்களும் அதன் அழகுக்குக் கட்டியம் கூறுகின்றன.

ஹீபர் ஹால் என்று சொல்லப்படும் ஹாஸ்டல்  அரை நூற்றாண்டுகளாகினும் அப்படியே என்றும் இளமையோடு காட்சியளிக்கிறது!

அந்த ஹீபர் காலில் தேசியகீதத்திற்கு சமமாகக் கருதப்படும் பாடல் ஒன்று உண்டு!

41 ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு பழகித் திரிந்த தோழர்கள் மறுபடியும் அங்கேயே சந்தித்துப் பசுமை நிறைந்த நினைவுகளை அசைபோட்டுப் பாடும் பாடலும் காட்சிகளும் மேலே!

அந்தப் பாடலின் வரிகள் கீழே!

If you come to Tambaram, darling
Come to Heber Hall
Heber is a paradise, Fish Pond and all
Ulunthuvadai, Masalvadai anything you want
Mess bills as big as hills
Heber is our haunt
(Chorus)
Way down in Tambaram
There’s old Heber Hall
Is there another like it?
No-not at all.
If you come to Tambaram, darling
Travelling in the trains
Get the Heber lads to meet you:
They’ve got the brains:
If you want to marry my darling
And to marry well
Stick to a Heber lad
And send the rest to Hell! 
(Chorus)

Come along on Sports Day, darling
See me run the mile,
High jumping, hurdling – In the Heber style
Some of us are fat and some of us are thin
But Heber is a sporting Hall
Whether we lose or win!

(Chorus)

We are all the members
Of the Heber family
Kachia moru, pachai moru eating happily
The Tamilian, the Telugu, the Coorg, the Malayalee
We are the Sons of Heber
Home of the free

(Chorus)

மீனங்காடி (ஒன்பதாவது வாரம்)

               எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்    

image

மேரி தனது நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுதத் தொடங்கினாள்.

‘எந்த வேலையைச் செய்வது என்ற முடிவு நம் கையில் இல்லை.  ஆனால் எந்த வேலையை எப்படிச்  செய்வது என்ற முடிவு நிச்சயமாக நமது கையில் தான் இருக்கிறது. ‘

image

மேரி யோசித்தாள்.  ‘ ஏன் எந்த வேலையைச் செய்வது என்ற முடிவு நம் கையில் இல்லை?

 ‘சரியான கேள்வி மேரி ‘

 நாம் வேலையை எப்போது வேண்டுமானாலும் விட்டு விடலாமே !  அந்த வகையில் பார்த்தால் முதல் கருத்துக்கான முடிவு நம் கையில் தானே இருக்கு .  ஆனால் அது புத்திசாலித்தனமாகுமா ? நமக்குக் கிடைத்த வாய்ப்பையும், திறமையையும் நழுவ விடுவது போல அல்லவா அமையும் !  அதனால் தான் மறுபடி சொல்கிறேன். வேலையைத் தேர்ந்தெடுக்கிற முடிவு நம் கையில் இல்லை.  ஆனால் கிடைத்த வேலையில் நாம் கொண்டு வருகிற ஆர்வம், முயற்சி , கவனம் எல்லாம் நம்ம கையில் தான் இருக்கு. ‘

டோனி தொடர்ந்தான். “ நான் ஒரு பாட்டி கதை சொல்றேன் !  என் பாட்டி எப்போதும் சந்தோஷத்தோடு தான் எல்லா வேலையையும் செய்வாள்.  நாங்களும் வீட்டிலே  அவளுக்கு  ஒத்தாசையா தட்டு கழுவறது,  பாத்திரம் எடுத்து வைக்கிறது இந்த வேலையெல்லாம் ஜாலியா செய்வோம்.   அதுக்குக் காரணம்   பாட்டியோட ஈடுபாடு.  ஒரு குஷி ! ஒரு விளையாட்டு போல இருக்கும். எங்கள் வீட்டு அடுப்படி தான் எங்கள் விளயாட்டு மேடை.  இப்ப புரியுது. பாட்டிக்குப் பாத்திரம் தேய்க்கிற வேலையெல்லாம் பிடிக்காமல் இருந்தாலும் அதை ஜாலியா செய்யும்படி தன்னை மாத்திக்கிட்டு மத்தவங்களையும் ஜாலியா செய்ய வைத்தாள் . 

image

அந்த மாதிரி தான் நானும் என் நண்பர்களும் இந்த மீனங்காடியில் ஒவ்வொரு நாளும் ஒரு புது உற்சாகத்தைக் கொண்டு வருகிறோம்.  சோகமா  வந்து ஏனோ தானோ என்று வேலை செய்வதில் யாருக்கு லாபம்?  அதுக்குப் பதிலா சந்தோஷமா – குஷியா –  ஜாலியா வேலை செஞ்சா ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய நாளாக இருக்கும்.  இந்த எண்ணத்தைப் பற்றி நாங்கள் அடிக்கடி பேசுவோம்.  ஒவ்வொரு நாளும் சிறப்பான நாளாய் அமைய இந்த ‘ எண்ணம்  ‘ ஒன்று இருந்தால் போதும்.  நான் சொல்வது சரி என்று உனக்குப் படுகிறதா? “

“ நிச்சயமா “

எங்களுடைய எண்ணங்களைப் பற்றி நினைக்கும்போது எங்களுக்கே ரொம்பப் பெருமையாக இருக்கு.  உலகமே எங்கள் ஆர்வத்தைப் பார்த்து ஆச்சரியப் பட வேண்டும் என்று முடிவெடுத்தோம். இப்படி முடிவு எடுத்த பிறகு ஒவ்வொரு நாளும் குஷி நாள் தான்.  சாதாரண நாள் என்ற பேச்சுக்கே இடமில்லை.  நான் சொல்வது உனக்குப் புரியுதா?  மீன் கடை வேலை என்பது ஈரம், குளிர், நனைந்த உடை, நாற்றம், வழுக்கல்  எல்லாம் கலந்த கஷ்டமான வேலை.  ஆனால் அந்த வேலையில் எப்படி எங்கள் எண்ணத்தைக்  கொண்டு வந்தோம் என்பதுதான் எங்கள் வெற்றி.”

“ புரியுது டோனி!  ஒவ்வொரு நாளும் ஆர்வத்தோடு வேலை செய்கிறீர்கள். அந்த எண்ணம் தான் உங்க வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறது.  நாம் செய்யற வேலையை ஏன் சாதாரணமாகச் செய்யணும்?  உலகமே பாராட்டுற அளவிற்குப் பெரிசா செஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்? ரொம்ப சரியாய்ப் படுது டோனி!”

image

“ புரிந்து கொள்வது சுலபம் மேரி!  ஆனால் செய்யறது அவ்வளவு ஈஸி கிடையாது. ஒரே நாளிலே இந்த மாதிரி  மாத்திக்க  முடியாது.  எங்களுக்குக்  கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆச்சு.  நான் சொன்னேன் இல்லே?  முன்னாடி நானும் சொந்த வாழ்க்கையை வேலையோடு போட்டுக் குழப்பி நானும் குழம்பிக்கிட்டிருந்தேன். உலகமே என் கிட்டே மோசமா நடந்துக்கிற மாதிரி ஒரு எண்ணம்.  அதைப் பழி வாங்க நானும் மத்தவங்க கிட்டே படு மோசமா நடந்து கொண்டிருந்தேன்.  ஒரு பெரியவர் என்னைத் தனியா கூப்பிட்டு அறிவுரை சொன்னார்.  “ ஏன் இப்படி வெறுப்போடு வேலை செய்யறே?  விருப்பத்தோடு , அதுக்கு மேலே ஆர்வத்தோடு அதுக்கும் மேலே எண்ணத்தோடு செய்!  சொர்க்கமே உன் காலடியில் கிடக்கும்” என்று.  நானும் தீவிரமா யோசித்துப் பார்த்தேன். ‘நாம் ஏன் அவர் சொன்னபடி மாறக் கூடாது? ‘ என்று.  அவர் சொன்ன விதத்திலே, வார்த்தைகளிலே எனக்கு  முழு நம்பிக்கை பிறந்தது.  மனிதன் தன் எண்ணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் என்ற தத்துவத்தைக் கண்டு கொண்டேன்.”

image

மேரிக்கு டோனியின் பேச்சு மட்டுமல்ல, அவனையும் ரொம்பப் பிடித்து விட்டது.  பகல் கனவில் ஆழ்ந்து கொண்டிருந்த அவள் சட்டென்று விழித்துக் கொண்டாள் .  டோனி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.  “ சரி டோனி! நானும் நிச்சயமாய் முயற்சிப்பேன் !  இந்த வெற்றிக்கு ‘ எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘ என்ற ஒரு மருந்து தானா? இல்லை, இன்னும் வேறு மருந்து இருக்கா? – ஆர்வத்தோடு கேட்டாள் மேரி.

“ இந்த வெற்றிக்கு  மொத்தம் நாலு  காரணம் கண்டு பிடிச்சோம்.  இந்த ‘ எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்’  தான் ரொம்ப ரொம்ப முக்கியம்.  இது இல்லாமல் மற்றது எல்லாம் இருந்தும் பிரயோஜனமில்லை. இன்னிக்கு இத்தோட  நிறுத்திக்குவோம்.  மற்ற மூன்றையும் அப்புறம் பார்த்துக்கலாம்.  உனக்கு எப்போ நேரமிருக்கிறதோ அப்போ கூப்பிடேன்.  நாம் பேசலாம். என்  போன் நம்பர் தெரியுமில்லையா? “

“ உங்க மீனங்காடியில தான் ஒவ்வொரு மூலையிலும் பெரிது பெரிதாக எழுதி வைத்திருக்கிறீர்களே !

ஆமாமில்லே! நாங்க ஏன் வெட்கப்படணும்? உன்னை சந்தித்ததிலே ரொம்ப சந்தோஷம் மேரி ! மீண்டும்  பார்க்கலாம்.”

(தொடரும்) 

குட்டீஸ் லூட்டிஸ்

                                     image

                                                                       (சிவமால் )

கம்ப்யூட்டரில்  வேலை முடிந்த பின் ஷட்டௌன் பண்ணினேன். கம்ப்யூட்டர் திரையையே பார்த்துக் கொண்டிருந்த என் பேத்தி ‘தாத்தா இந்தக் கம்ப்யூட்டருக்கு இங்கிலீஷே தெரியல . விண்டோஸ் என்கிறது ப்ளூரல் தானே.. விண்டோஸ் ஆர் ஷட்டிங் டவுன் தானே வரணும். விண்டோஸ் ஈஸ்  ஷட்டிங் டவுன்னு வறது பார்.  " என்றாள். ஒரு நிமிஷம் அவளையே பார்ததுக்கொண்டிருந்த நான் அவளை அப்படியே  அணைத்துக் கொண்டேன்!

                                   குழந்தை  யேசு 

image

 ஏம்மா.. ஏசுவை சிலுவையில அறைஞ்சாங்க? யு‌கே‌ஜி  படிக்கும் லக்ஷ்மி  கேட்டதும் சரோஜாவுக்குக்  கோபமா வந்தது. இதுக்குத் தான் இந்த கான்வெண்ட்டே கூடாது. என்கிறது. சின்னக் குழந்தைக்கு கொஞ்ச கொஞ்சமா மத போதனை செய்யறாங்க!  இப்படியே விட்டா மதத்தையே மாத்திடுவாங்க! சரோஜா பொறுமினாள் . இந்த ஆனந்தன் எதை சொன்னாலும் காதிலே போட்டுகிறதே இல்லை. காலையிலிருந்து ராத்திரி வரை மாடு மாதிரி உழைப்பான். பாத்திர வியாபாரம் துணி வியாபாரம் எல்லாம் சைக்கிளில் தான். சரோஜாவுக்கு அவன் சம்பாதிப்பது போதலையே என்ற குறை எப்போதும் உண்டு. ‘ஏசுவும் நம்ம அப்பா மாதிரி தானேம்மா? நமக்காகக் கஷ்டப் பட்டாராமே! அப்போ அப்பா தான் ஏசுவா? பொறிதட்டியது சரோஜாவுக்கு.  

                                      பள்ளிக்கூடம்

image

மாபெரும் அமெரிக்கன் பள்ளி! அஸ்திவாரத்திலிருந்து உருவாகிக் கொண்டிருந்தது. பத்து மாதமாகக் கட்டப்படும் கட்டடம். நூற்றுக்கணக்கான தொழிளாளர்கள் அங்கேயே குழந்தை குட்டிகளுடன் தங்கி கட்டிடத்தை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

 எட்டு வயசு வேலு அங்கே செங்கல் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான். ‘மச்சான் !நம்ம வேலுவை  இந்த வருஷம் ஸ்கூலிலே கட்டாயம் போடணும் ! ’ ராமாத்தா கெஞ்சினாள். கவலைப் படாதே ராமாத்தா! அதிர்ஷ்டம் இருந்தா வேலுவுக்கு இந்த ஸ்கூலிலேயே இடம் கிடைக்கும்! ’ நடக்கற  காரியமா பேசு மச்சான்! ராமாத்தா அலுத்துக் கொண்டாள். 

கடைசியில் அவன் சொன்ன படி வேலுவுக்கு அந்த ஸ்கூலில் இடம் கிடைக்கத் தான் செய்தது. .

எப்படி?

1. பாசிடிவ் முடிவு

பள்ளி திறப்பு விழாவின் போது அங்கு வைத்திருந்த வெடிகுண்டைக் கண்டுபிடித்து  அப்புறப்  படுத்தியதற்காக பள்ளி நிர்வாகம் வேலுவைத் தத்தெடுத்து  அங்கேயே படிக்க இடமும் கொடுத்தது.

2. நெகட்டிவ் முடிவு

பள்ளி திறப்பு விழாவின் போது அங்கு வைத்திருந்த வெடிகுண்டைக் கண்டுபிடித்து  அப்புறப்  படுத்திய போது நடந்த விபத்தில் வேலு சிதறிப் போகிறான்.. அவனது படத்திற்குப் பள்ளி மெயின் ஹாலில்  இடம் கிடைத்தது. 

கொஞ்சிடு தாயே

 

image

தேவீ !
தேவ        தேவதை    நீ     தானே !     மலர்
தூவும்      பக்தனும்    நான்  தானே !

கண்களைத்  திறந்ததும்   பெய்திடும்   பொன்மழை
புன்னகைக்   கீற்றினில்    பொங்கிடும்  தேன் இதழ்
உருவே !    தினமும்     உருகும்     திருவே !
கனவே !    கணமும்    மறவேன்    உனையே !
பக்தனுக்கு   ஒரு        வரம்        தந்திடுவாய் ! உன்னை
பக்தியால்    பாடிட       வரந்தருவாய் !

கவிதாபிஷேகம்    செய்திட     வந்தேன்
கற்பனை    மலர்களை   வார்த்தையில்      தொடுத்தேன்
தேவியின்   இளநலம்    தேடினேன்   கவிநயம்
தூவினேன்   கண்மலர்    தாளடி      பணிந்தேன்
அஞ்சுதல்    அகண்டு     நெஞ்சமே   துள்ளும்
கெஞ்சியே   வந்தேன்    கொஞ்சிடு   தாயே !

This gallery contains 7 photos.

சென்னையில் பார்த்து ரசிக்க வேண்டிய இடம் தக்ஷின் சித்ரா. சென்னை கிராஃப்ட் பவுண்டேஷன் ஆரம்பித்த கலாசாரங்களைப் பாதுகாக்கும் கூடம் இது. தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,ஆந்திரா ஆகிய நான்கு மாகாணங்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.  பத்து ஏக்கரில்  E C R ரோட்டில் முட்டுக்காட்டிற்கு அருகில் இருக்கும் அருமையான இடம் தக்ஷின்  சித்ரா. நுழைவுக் கட்டணம் 120 ரூபாய்.  குழந்தைகளைக் கவர நிறைய வைத்திருக்கிறார்கள். நாட்டுப்புற நடனங்கள் மேஜிக் காட்சி, மற்றும்  அம்ஃபி தியேட்டரும் உண்டு. கேண்டீன் ,ரெஸ்டாரெண்ட்டும் உண்டு.  தமிழ்நாட்டில் செட்டியார் … Continue reading

This gallery contains 2 photos.

ஆனந்த விகடன் 52 மார்க் கொடுத்து கவுரவித்திருக்கும் படம் சதுரங்க வேட்டை. மிரட்டும் வசனம். எதார்த்த நடிப்பு. கச்சிதமான திரைக்கதை. எழுதி இயக்கிய வினோத்தையும் தயாரித்த லிங்குசாமியையும் எததனை முறை பாராட்டினாலும் போதாது.  மனசில குற்ற உணர்வே இல்லாமே மற்றவரை ஏமாத்தறது தப்பே இல்லை! பொய்யைச் சொல்லும் போது கொஞ்சம் உண்மையையும் கலந்து சொல்லணும். வெள்ளைச் சட்டையைப் போட்டாலே மத்தவனை ஏமாத்தணும்னு தோணுதில்லே ! பணம் சம்பாதிக்க ஈசியான வழி ஆயிரம் இருக்கு மண்புழு விற்பனை , … Continue reading

தலையங்கம்

பெங்களூரில் 6 வயது பள்ளிச் சிறுமியை பலாத்காரம் செய்த அந்தப் பாவிகளை எப்படித் தண்டிப்பது? இந்தக் கொடுமைக்கு வேற வழியே இல்லையா?

எப்போது  பேப்பரைத் திருப்பினாலும் கற்பழிப்பு, பாலியல் கொடுமைகள்!

டெல்லியில் அன்று ஒரு நிர்பயா! காட்டுத்தீ  போல பரவியது. அதற்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தலித் பெண்களுக்கு எதிராக இந்த மாதிரிக் கொடுமைகள்! இன்று பெங்களூரில்! இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இது குறைச்சல் இல்லை!

எந்த மாநிலத்தில் இது அதிகம்?! சிறுவர்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களுக்குத் தண்டனை தரலாமா கூடாதா? இந்தியாவில் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு பலாத்காரம் நிகழ்கிறது! இப்படி எத்தனையோ   புள்ளி விவரங்கள்!

image

இதற்கு நாம் தீர்வு காண எங்கே போவது?

திரைப்படத் துறையினர் – இவர்கள் தான் மூலப் பொருள் -மூல  காரணம் என்ற மாபெரும் குற்றச்சாட்டு!

அரசியல்வாதிகள் – இவர்கள் தான் இதற்கு ஆரம்ப காரணம் ! இரவினில் ஆட்டம் பகலிலும் ஆட்டம் இது தான் இவர்கள் உலகம்!

காவல்துறை – இவர்கள் பாலுக்குக் காவலா பூனைக்குத் தோழனா?

ஆசிரியர்கள் – அவர்கள் சிறுமியரைக் கூட விடுவதில்லை 

ஆன்மீக வாதிகள் – அறையில் ஆடியவர்கள் இப்போது அம்பலத்தில் ஆடுகிறார்கள்!

மாணவர்கள் – டேட்டிங் என்ற பெயரில் அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கிறார்கள்!

அலுவலகங்கள் – ஒரு காலத்தில் அரச புரசலாக இருந்தது இன்று அதனாலென்ன? இருப்பது சில நாள் அனுபவிப்போமே என்கிறார்கள் 

ஐ‌டி கம்பெனிகள் – இவர்களுக்குக் கிடைக்கும் சுதந்திரமும் வாய்ப்பும்  பயணங்களும் இவர்கள் செய்வதைத் தவறு என்று எண்ண  முடியாதபடி செய்து விடுகின்றன!

கிராமங்கள் – வெளியே வராமல் இவை தொடர்ந்து நடக்கின்றன! அவற்றைத் தவிர சில பஞ்சாயத்துக்களும் இதையே தீர்ப்பாகத் தருகின்றன.

நீதித்துறைகள் – உயர்ந்த இடங்களிலும் இவ்வகை வியாதி பரவியிருக்கிறது. 

சமுதாயத்தில் பரவியிருக்கும் இந்த நச்சு வேரை  எப்படிக் களையெடுப்பது? மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கமா? இன்டெர்நெட்டில் பொங்கிய விஷமா? அல்லது இது தான் விஞ்ஞான முன்னேற்றத்திற்கும்  மாறி வரும் சமுதாயத்திற்கும்  நாம் தரும் விலையா?

பெண்களுக்கு எதிரான இந்தக் குற்றத்திற்கு முக்கிய உடந்தை-  கள்,சாராயம்,மது,கஞ்சா,போதைப் பொருள்கள்! மற்றும் ஆபாசக் களஞ்சியங்கள்! இவற்றிற்குத் தடையிடுங்கள்! பாலியல் குற்றங்கள் பாதியாகக் குறைந்துவிடும்!

பெண்களே! நீங்களே சொல்லுங்கள்! இந்தக் கொடுமை தீர வேறு என்ன வழி இருக்கிறது! 

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191   
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன் 

துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி

ஆலோசர்கள் : அனுராதா & அர்ஜூன் 

தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா