ராமருக்கு கோயில் கட்டப் போறேண்டா – அதில்
பாபருக்கு சிலை வைக்கப் போறேண்டா !
ஜீசஸைக் கும்பிடத் தான் போறேண்டா – அவர்
தேஜஸுக்கு மண்டியிட வாறேண்டா !
அல்லாவைத் தொழுதிடத் தான் போறேண்டா – அவர்
எல்லார்க்கும் நல்லதையே தர்வார்டா !
கண்ணன் சொன்ன கீதையைத்தான் கேளேண்டா
கர்த்தரின் பைபிளைத்தான் படியேண்டா
அல்லாவின் குரானைத்தான் ஒதேண்டா
எல்லாமே ஒண்ணு தாண்ணு புரியும்டா !
கணபதிக்குத் தோப்புக்கரணம் போடேண்டா
மரண பயம் உன்னை விட்டு போகும்டா !
மாதாகோவிலில் மெழுகுவர்த்தி ஏத்தேண்டா
மனசில் உள்ள இருட்டெல்லாம் மறையும்டா
அஞ்சு வேளை பள்ளி வாசல் செல்வோம்டா
அஞ்சுகிற தீமையெல்லாம் தொலையும்டா !
ஆண்டவன் எல்லோருக்கும் ஒண்ணு ஒண்ணு – அதை
அறியாதவன் தலையிலெல்லாம் மண்ணு மண்ணு தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ நல்லாத் தெரிஞ்சுக்கோ
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ எல்லாம் புரிஞ்சுக்கோ !!